மது கோடா திடீர் மாயம் - வருமான வரி அதிகாரிகள் அதிர்ச்சி
Subscribe to Oneindia Tamil
ராஞ்சி: ரூ. 4000 கோடி ஊழல் வழக்கில் சிக்கியுள்ள ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் மது கோடாவை இன்று பி்ற்பகல் முதல் காணவில்லை என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஜார்க்கண்ட் மாநில வருமான வரித்துறை புலனாய்வுப் பிரிவு இயக்குநர் உஜ்வால் செளத்ரி கூறுகையில், மது கோடாவிடம் சில முக்கியத் தகவல்களைக் கேட்பதற்கு விரும்பிய வருமான வரித்துறையினர், அவரை அணுகினர்.
பிற்பகலில் தனது வீட்டிற்கு வருமாறு மது கோடா கூறியிருந்தார். அதன்படி அதிகாரிகள் பிற்பகலில் அவரது வீட்டுக்குச் சென்றனர். ஆனால் அங்கு மது கோடா இல்லை என்று தெரிவித்தார்.
வருமான வரித்துறை விசாரணையைத் தவிர்க்கும் பொருட்டு தலைமறைவாகி விட்ட மது கோடாவால் ஜார்க்கண்ட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications