முல்லை அணை-மதுரையில் வைகோ உண்ணாவிரதம்

மேலமாசி வீதி- வடக்குமாசி வீதி சந்திப்பில் காலை 9 மணிக்கு இந்த உண்ணாவிரதத்தை ஐந்து மாவட்ட விவசாய சங்கத் தலைவர் கே.எம்.அப்பாஸ் தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான மதிமுக தொண்டர்களும் பங்கேற்றனர்.
மாலையில் அதிமுக பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். முன்னதாக இந்த உண்ணாவிரதத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பங்கேற்பார் என வைகோ கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
'மலையாளியை அடித்தவன் சபரிமலை போக முடியுமா?':
நேற்று ராமேஸ்வரம் அருகே உள்ள தங்கச்சிமடத்தில் நடந்த திருமண விழாவில் வைகோ பேசுகையில்,
இலங்கையில் தமிழினத்தை கொன்று குவித்தவர், ஆறரை கோடி தமிழர்கள் வாழும் இந்தியாவிற்கு அதுவும் தமிழகத்தின் நுழைவுவாயிலாக உள்ள திருப்பதிக்கு வந்துள்ளார். அவருக்கு ராஜமரியாதை பூர்ணகும்ப மரியாதை கொடுக்கப்படுகிறது.
இதுவே ஒரு மலையாளியை அடித்தவன் அய்யப்பன் கோவிலுக்கு வந்திருந்தால் மரியாதை செய்வார்களா? இதை நேருக்கு நேராக பிரதமரிடம் கேட்க எனது தொகுதி மக்கள் வாய்ப்பளிக்கவில்லை. இதனால் இந்த மன்றத்தில் கேட்கிறேன்.
நான் பிரபாகரனுடன் 27 நாட்கள் வன்னிகாட்டில் தங்கி இருந்தபோது அவர், தனி தமிழ் ஈழத்தை சர்வாதிகாரியாக ஆளமாட்டேன். ஒரு தம்பியே ஆள்வான், நான் முப்படை தளபதியாக செயல்படுவேன். பெரிய கடற்படை அமைத்து ராஜராஜசோழன், கரிகாலன் போன்ற மன்னர்கள் ஆண்டது போல் கடல் பகுதியில் தமிழ் ராஜ்யத்தை அமைப்பேன் என்று கூறினார்.
உலகில் எந்த போராளி இயக்கத்துக்கும் இல்லாத சிறப்பம்சம் விடுதலைப்புலி இயக்கத்துக்கு உண்டு. முப்படைகள் கொண்ட இயக்கம் பிரபாகரன் இயக்கம். விமானத்தை கண்டுபிடித்த சகோதரர்கள் இருந்திருந்தால் பிரபாகரனுக்கு மரியாதை செலுத்தி இருப்பார்கள்.
முள்வேலிகளில் இருக்கும் தமிழர்களை தந்தை செல்வா கண்ட கனவுப்படி குடியமர்த்தவேண்டும். உலகில் தமிழ் இனத்திற்கு முகவரி கொடுத்தவர், பிரபாகரன்.
இலங்கை கடற்படையினருடன் சீன சிப்பாய்களும் சேர்ந்து தமிழக மீனவர்களை தாக்கிவருகின்றனர். இதை வன்மையாக கண்டிக்கிறேன் என்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications