வழக்குப்பதிவில் மெத்தனம்: இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
கோவை: பெண் போலீஸ் காணாமல் போன வழக்கை பதிவு செய்யாமல் இழுத்தடித்த காங்கேயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் மகளிர் காவல் நிலைய எஸ்.ஐ சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் மகளிர் போலீஸ் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றியவர் ஜெயமணி. கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி, தமிழக துணை முதல்வர் வருகையை ஒட்டி, பாதுகாப்பு பணிக்காக, திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் சென்றார். அதன் பின்பு வீடு திரும்பவில்லை.
ஜெயமணியின் கணவர் மணியன், ஆகஸ்ட் 24ம் தேதி, காங்கேயம் மகளிர் எஸ்.ஐ. தனலட்சுமியிடம் புகார் கொடுத்தார். ஆனால், எஸ்.ஐ. தனலட்சுமி அந்த புகாரை வாங்க மறுத்தவிட்டார். காங்கேயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அகஸ்டின் பீட்டரிடம், மணியன் புகார் அளித்துள்ளார். அவரும் புகாரை வாங்க மறுத்து விட்டார்.
இதனால் மனம் உடைந்த மணியன், திருப்பூர் எஸ்.பி. சாந்தியிடம் புகார் அளித்தார். இதனையடுத்து, பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் ஆகஸ்ட் 30ம் தேதி புகார் பதிவு செய்யப்பட்டது.
பின்பு போலீஸ் விசாரணையில் பெண் காவலர் ஜெயமணி கொலையானது கண்டுபிடிக்கப்பட்டு, கொலையாளியும் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், உரிய நேரத்தில் தன் புகாரை வாங்க மறுத்து அலைக்கழித்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு, ஜெயமணியின் கணவர் மணியன் புகார் மனு அளித்தார்.
இதன் மீது விசாரணை நடத்திய கோவை டி.ஐ.ஜி.பாலநாகதேவி, காங்கேயம் இன்ஸ்பெக்டர் அகஸ்டின் பீட்டர், காங்கேயம் மகளிர் போலீஸ் எஸ்.ஐ. தனலட்சுமி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்











Click it and Unblock the Notifications