நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் புகை-பயணிகள் பீதி
சென்னை: சென்னையிலிருந்து நாகர்கோவில் கிளம்பவிருந்த ரயிலின் ஏசி பெட்டியிலிரு்நது திடீரென புகை வெளிவந்ததால் பீதியடைந்த பயணிகள் கண்ணாடி ஜன்னல்களை உடைத்து வெளியே குதித்து ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை சென்டிரலில் இருந்து நாகர்கோவிலுக்கு வெள்ளிக்கிழமை தோறும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் மாலை 6.10 மணிக்கு சென்டிரலில் இருந்து புறப்பட்டு செல்வது வழக்கம்.
அதேபோல நேற்று மாலையில் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் புறப்படுவதற்கு தயாராக இருந்தது. 6 மணி அளவில் 3-ம் வகுப்பு பி-1, ஏசி பெட்டியில் உள்ள ஏ.சியில் இருந்த குளிர்ந்த காற்றிற்கு பதிலாக வெண்ணிற புகை வந்தது. அடுத்த சில வினாடிகளுக்கெல்லாம் புகை மூட்டம் வேகமாக பெட்டிக்குள் பரவியது.
இதனால் அங்கு அமர்ந்திருந்த பயணிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. தீப்பிடிக்கிறது தப்பித்து ஓடுங்கள் என்று ஒரு வாலிபர் வெளியே ஓடினார். இதையடுத்து மற்ற பயணிகளும் வெளியே ஓட முயன்றனர். இதனால் கூட்ட நெரிசலாகி விட்டது.
இந்த நிலையில் சில பயணிகள் உயிர் பிழைக்க வேண்டும் என்ற வேகத்தில் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்து அதன் வழியாக வெளியே குதித்து ஓடினர். இதனால் சிலருக்கு காயம் ஏற்பட்டது. இந்த களேபரத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ரயிலின் மேற்கூரையில் அமைக்கப்பட்டிருந்த ஏசி மெஷினின் ஒரு பகுதியில் மின் கசிவு ஏற்பட்டு புகை மூட்டம் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக அந்த பெட்டிகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மின்கசிவு சரி செய்யப்பட்ட பின்னர் சுமார் 20 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது.
பழைய ரயில் பெட்டி ஒன்றை பராமரிப்பு பணிகள் செய்து புதிதாக இந்த ரயிலுடன் இணைக்கப்பட்டது. ஏசி பெட்டியில் தீ விபத்து ஏற்படுவது இதுவே முதல் முறை. எனவே இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தர விடப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரயில் நிலையத்திலேயே இந்த அசம்பாவிதம் ஏற்பட்டதால் பெரும் உயிரிழப்பிலிருந்து தப்பியதாக பயணிகள் பீதி அகலாத கண்களுடன் தெரிவித்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications