16 ஆண்டுக்குப் பின்னர் சேலத்திற்கு விமான சேவை

சேலம் - சென்னை இடையிலான விமான சேவையை கிங்பிஷர் நிறுவனம் நேற்று தொடங்கியது.
சென்னை - சேலம் இடையிலான பயண நேரம் ஒரு மணி நேரம் ஆகும். சென்னையிலிருந்து இந்த விமானம் பிற்பகல் 2.50க்குக் கிளம்பி, மாலை 3.50 மணிக்கு சேலத்தை சென்றடையும். மறுமார்க்கத்தில், மாலை 4.20 மணிக்கு சேலத்திலிருந்து கிளம்பி மாலை 5.20 மணிக்கு சென்னை அடையும்.
7 நாட்களுக்கு முன்பு இந்த விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்தால் அதற்கான கட்டணம் ரூ. 2,529 ஆகும். ஒரு வாரத்திற்குள் புக் செய்தால், ரூ. 2859 முதல் ரூ. 7000 வரை கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதல் நாளான நேற்று சேலத்திலிருந்து கிளம்பிய விமானத்திற்கு அனைத்து டிக்கெட்டுகளும் புக் ஆகியிருந்தன. ஒரு சீட் மட்டும் காலியாக இருந்தது.
இந்த விமான பயணத்தால் சேலம் மக்களுக்கு இன்னொரு பயனும் கிடைத்துள்ளது. கிங்பிஷர் சேவை மூலம், சேலத்திலிருந்து சென்னை வழியாக டெல்லிக்கும் பயணிகள் செல்ல முடியும். சேலத்திலிருந்து சென்னை வழியாக டெல்லி செல்ல விரும்புவோருக்கான கட்டணம் ரூ. 6700 ஆகும்.
கடந்த 1993ம் ஆண்டு சேலம் விமான நிலையம் தொடங்கப்பட்டது. கிட்டத்தட்ட 136 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் அமைந்துள்ளது தொழிலதிபர்கள், வர்த்தகர்கள் இந்த நிலத்தை தானமாக அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் எந்த விமான நிறுவனமும் சேவையைத் தொடங்க முன்வராததால் தொடங்கப்பட்டது முதல் விமான நிலையம் காலியாகவே கிடந்தது. ஆரம்பத்தில் என்இபிசி நிறுவனம் தனது சேவையை தொடங்கியது. ஆனால் பயணிகள் சரிவர வராததால் அந்த சேவை நிறுத்தப்பட்டது.
இதையடுத்து உள்ளூர் தொழில் துறையினர் இந்த விமான நிலையத்திற்கு உயிரூட்டும் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தனறர். கடந்த 2006ம் ஆண்டு ஏர் டெக்கான் நிறுவனம் சேலம் விமான நிலையத்திலிருந்து சேவையைத் தொடங்குவதாக அறிவித்தது. ஆனால் உள்ளூர் தொழில்துறையினர் ரூ. 90 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும் அல்லது 50 சதவீத அளவுக்கு விமான டிக்கெட்கள் விற்பனையாக வேண்டும் என அது உத்தரவாதம் கோரியது.
இந்த சமயத்தில் ஏர் டெக்கான் நிறுவனம் கிங்பிஷர் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது. நீண்ட காலமாக நிலவி வந்த பேச்சுவார்த்தைகளின் விளைவாக தற்போது கிங்பிஷர் நிறுவனம் தனது விமான சேவையை தொடங்கியுள்ளது.
சேலம் முக்கியப் பிரமுகரும், மாநில விவசாயத்துறை அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம் முன்னிலையில் நேற்று விமான சேவை தொடங்கி வைக்கப்பட்டது.
சேலம் உற்பத்திக் கவுன்சில் தலைவர் மாரியப்பன் இந்த சேவை குறித்துக் கூறுகையில், சேலம்- சென்னை விமான சேவை தொடர்ந்து நீடிக்கும் என உறுதியாக நம்புகிறோம். மேலும் பல தனியார் விமான நிறுவனங்கள் இங்கு சேவையைத் தொடங்க முன்வரும் என்றும் எதிர்பார்க்கிறோம் என்றார்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications