கோவிலுக்குள் பெண்களுடன் உல்லாசம்- அர்ச்சகர் சரண்
காஞ்சீபுரம்: காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோவில் கருவறைக்குள் பெண்களுடன் உல்லாசமாக இருந்து மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள அர்ச்சகர் தேவநாதன் காஞ்சி கோர்ட்டில் சரணடைந்தார்.
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள பழைய சீவரம் கிராமத்தை சேர்ந்தவர் தேவநாதன் (35). இவர் காஞ்சீபுரம் பஸ்நிலையம் அருகே உள்ள ஸ்ரீமச்சேஸ்வரர் கோவிலில் அர்ச்சகராக இருந்தார்.
கோவில் கருவறையில் அவர் பல பெண்களுடன் செக்ஸ் வைத்துக் கொண்டு அசிங்கப்படுத்திய செயல் வீடியோ காட்சிகளாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து தேவநாதன் தலைமறைவானார். அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும், முன்ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. அத்தோடு, தேவநாதனையும், அவருடன் உல்லாசமாக இருந்த பெண்களையும் கைது செய்து விசாரிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
இதையடுத்து தேவநாதனைப் பிடிக்க போலீஸார் தீவிரமாக முயன்று வந்தனர். இந்த நிலையில் தேவநாதன் பெண்களுடன் புரிந்த லீலைகள் அடங்கிய காட்சிகளை சிலர் சிடி போட்டு விற்க ஆரம்பித்ததால் இந்த விவகாரம் மேலும் சூடு பிடித்தது.
இந்த நிலையில் நேற்று அர்ச்சகர் தேவநாதன், காஞ்சீபுரம் முதல் வகுப்பு குற்றவியல் கோர்ட்டில், மாஜிஸ்திரேட் சுதா முன்னிலையில் சரண் அடைந்தார். தேவநாதன் சரண் அடையும் தகவல் பரவியதும் ஏராளமானோர் அங்கு கூடினர். பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்கள், டி.வி. வீடியோகிராபர்களும் குவிந்தனர்.
சரணடைந்த தேவநாதனிடம் பெயர் விவரங்களைக் கேட்டுக் கொண்ட மாஜிஸ்திரேட் அவரை வருகிற 30ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவரை போலீஸார் காஞ்சிபுரம் கிளைச் சிறையில் அடைத்தனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications