கள்ளநோட்டு- சென்னையில் 2 வாலிபர்கள் கைது
சென்னை: பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டுகளை வங்கதேசம் வழியாக சென்னைக்கு கொண்டு வந்து புழக்கத்தில் விட்ட வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை தி.நகரில் உள்ள ஒரு ஜவுளிக்கடைக்கு நேற்று வெளி மாநில வாலிபர் ஒருவர் துணி வாங்கினார். அப்போது அவர் கொடு்த்த 500 ரூபாய் நோட்டின் மீது கடைக்காரருக்கு சந்தேகம் ஏற்பட்டு, போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
போலீசார் உடனடியாக கடைக்கு வந்து 500 ரூபாயை சோதனை செய்ததில், அது கள்ளநோட்டு என்பது தெரிய வந்தது. உடனே அந்த வெளிமாநில வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அவன் பெயர் சாதிக் இஸ்லம் (29). மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவன் என்பது தெரிந்தது.
மேலும் சாதிக்கிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, 'நானும் இன்னொரு வரும் பெரியமேடு லாட்ஜில் தங்கியிருந்து கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட்டோம்' என்று கூறினான்.
உடனடியாக போலீசார் சாதிக்கை அழைத்துக்கொண்டு பெரியமேடு லாட்ஜுக்கு சென்றனர். ஆனால் சாதிக்கின் கூட்டாளி அங்கிருந்து தப்பி விட்டான். உடனே, சென்ட்ரலில் இருந்து கொல்கத்தாவுக்கு செல்லும் ரெயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகளில் சோதனையிட்ட போது, அதில் பதுங்கியிருந்த கூட்டாளி போலீசிடம் சிக்கினான்.
கூட்டாளியின் பெயர் அபில் (29). பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டுகளை வங்காள தேசம் வழியாக இவன் சென்னைக்கு கொண்டு வந்தது விசாரணையில் தெரிய வந்தது. அபில்சாதிக் வைத்திருந்த பையில் ரூ. 30 ஆயிரத்துக்கு 500 ரூபாய் கள்ள நோட்டுகள், ஒரிஜினல் ரூபாய் 4,300 இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications