அர்ச்சகர் தேவநாதனின் காமலீலை-சிடி போட்டு விற்றவர் கைது

Subscribe to Oneindia Tamil

Devanathan
சென்னை: காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோவில் கருவறையில் பெண்களுடன் அர்ச்சகர் தேவநாதன் ஆபாசமாக இருந்த காட்சிகள் அடங்கிய வீடியோவை சிடிக்களி்ல் பிரிண்ட் போட்டு விற்பனைக்கு விட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார்.

தேவநாதன், பல்வேறு பெண்களுடன் கோவில் கருவறைக்குள் அசிங்கமாக நடந்து கொண்ட காட்சிகள் அடங்கிய சிடிக்கள் காஞ்சிபுரத்திலும், சென்னையிலும் உலா வர ஆரம்பித்தன.

இதனால் போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சிடிக்களை விற்பது யார் என்ற வேட்டையில் இறங்கினர். ஆரம்பத்தில் இந்த சிடி ரூ 100க்கு விற்றது. ஆனால் செய்தி பரவி கிராக்கி ஏற்பட்டதால் விலையை ரூ. 500 வரை உயர்த்தி விட்டனராம்.

இதையடுத்து சிபிசிஐடி போலீஸார், காந்தி ரோடு, கலவை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சி.டி. கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கிட்டத்தட்ட 1000 புதுப் பட சிடிக்கள்தான் சிக்கின. தேவநாதன் ஆபாச சிடி கிடைக்கவில்லை.

இந்த நிலையில் காஞ்சீபுரம் கலவை ரோட்டில் கிருஷ்ணா ரேடியோஸ் என்ற கடையில் ஆபாச சி.டி.க்கள் பதிவு செய்து விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

கடையில் இருந்த கம்ப்யூட்டரை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், அர்ச்சகர் தேவநாதன் பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற படங்கள் இருந்தன. இதனை பார்த்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

கடையில் இருந்த செந்தில்குமார் (30). என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். காஞ்சீபுரம் கவரை தெருவை சேர்ந்த இவரிடம்தான் தனது செல்போனை பழுது பார்க்க தேவநாதன் கொடுத்திருந்ததாக கூறப்படுகிறது.

செல்போனில் இருந்த ஆபாச வீடியோவை காப்பி செய்து செந்தில்குமார் பல பிரிண்டுகள் போட்டு விற்பனை செய்ததும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த கம்ப்யூட்டர் தற்போது கோர்ட்டில் ஒப்படைக்கப்படடுள்ளது. முறைப்படி கோர்ட்டிலிருந்து அதைப் பெற்று ஹார்ட் டிஸ்க்கை சோதனையிடவுள்ளனர்.

போலீஸ் காவலில் எடுக்கப்படும் 'அசிங்க' அர்ச்சகர்:

இந நிலையில் 'அசிங்க' அர்ச்சகர் தேவநாதனை காவலில் எடுத்து விசாரிக்க காஞ்சிபுரம் போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

இந்த விசாரணையின்போது எத்தனை பெண்களுடன் கருவறைக்குள் அசிங்கமாக நடந்து கொண்டார் தேவநாதன், அந்தப் பெண்கள் யார் என்ற விவரம் தெரிய வரும்.

கருவறை அசிங்கத்தை நடத்தி விட்டு தலைமறைவான தேவநாதன், நேற்று முன்தினம் காஞ்சீபுரம் முதல் வகுப்பு குற்றவியல் கோர்ட்டில், மாஜிஸ்திரேட் சுதா முன்பு சரணடைந்தார். அவரை வருகிற 30-ந் தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டதை அடுத்து தேவநாதன், காஞ்சீபுரம் கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

தற்போது தேவநாதனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக நேற்று காலை காஞ்சீபுரம் முதல் வகுப்பு குற்றவியல் கோர்ட்டில் பெரிய காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாபிராமன் மனுதாக்கல் செய்தார்.

அப்போது தேவநாதன் பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ ஆதாரங்களையும் போலீசார் தாக்கல் செய்தனர்.

இதற்கிடையே, தான் பெண்களுடன் உல்லாசமாக இருப்பதைப் போன்ற காட்சிகளை தேவநாதன் ஏன் படமாக்கினார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை இந்தக் காட்சிகளை வெளிநாடுளுக்கு விற்கும் நோக்கில் இதை அவர் செய்திருக்கலாம் அல்லது சம்பந்தப்பட்ட பெண்களிடம் இதைக் காட்டி மிரட்டி தொடர்ந்து உல்லாசமாக இருக்க திட்டமிட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

இதுதவிர இந்த சம்பவத்தில் வேறு சிலருக்கும் பங்கு இருக்கலாமோ என்ற சந்தேகமும் போலீஸாரிடம் உள்ளது.

தேவநாதனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும்போது இந்த சந்தேகங்களுக்குப் பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+