கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு
வள்ளியூர்: தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அணுமின் நிலையத்தை ஒட்டிய கடற்கரைப் பகுதிகளில் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கூடங்குளத்தில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் ரஷ்யா நாட்டு உதவியுடன் சுமார் 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் முதன் அணு உலை அடுத்த ஆண்டில் மின் உற்பத்தியை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்தியாவில் அணுமி்ன் நிலையங்கள் மீது தீவிரவாதிகள் குறி வைத்திருப்பதாக வெளியான செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து இந்தியாவில் உள்ள அணு மின் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்காவிட்டாலும் அணுமின் உற்பத்திக்கு தேவையான செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிபொருள் ரஷ்யாவில் இருந்து கொண்டு வரப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.
எனவே ராணுவ வீரர்கள், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் இப்பகுதியை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அணுமின் நிலையத்தை ஒட்டிய கடற்கரை பகுதிகளில் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வாகனங்கள் மற்றும் பார்வையாளர்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அணுமின் நிலையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications