ஆஸ்திரேலியாவில் இந்தியத் தம்பதி மீது இனவெறித் தாக்குதல்
மெல்போர்ன்: மெல்போர்ன் நகரில் வசித்து வரும் இந்தியத் தம்பதி சிலரால் தாக்கப்பட்டது. இவர்கள் மீதான தாக்குதல் இனவெறித் தாக்குதலாக இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.
இரண்டு பெண்கள் உள்ளிட்ட 3 பேர் கொண்ட கும்பல், இரும்புக் கம்பி, ஸ்டீல் சேர் உள்ளிட்டவற்றால் இந்தியத் தம்பதியைத் தாக்கியுள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான அவர்களின் பெயர் ரோட்னி ராஜ், அவரது மனைவி ரத்னா. புந்தூரா என்ற இடத்தில் உள்ள அவர்களது வீட்டில் நவம்பர் 14ம் தேதி இருவரும் தாக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ரோட்னி கூறுகையில், சம்பவத்தன்று இரவு 10.30 மணியளவில் வீட்டுக்கு வெளியே எனது நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. இதையடுத்து நான் எட்டிப் பார்த்தபோது இரண்டு பெண்களும், ஒரு ஆணும் நின்றிருந்தனர்.
அவர்களை வெளியே போகுமாறு கூறி சத்தம் போட்டேன். பின்னர் உள்ளே வந்து விட்டேன். சிறிது நேரத்தில் மீண்டும் சத்தம் கேட்டது. இதையடுத்து வீட்டை விட்டு வெளியே வந்த நான் காரேஜுக்குப் போய்ப் பார்த்தபோது அங்கு நின்றிருந்த எனது காரின் மீது ஒரு ஸ்டீல் சேரை போட்டு வைத்திருந்தது அந்தக் கும்பல்.
பி்ன்னர் எனது லெட்டர் பாக்ஸை எடுத்து ஆராய்ந்து கொண்டிருந்தனர். இதையடுத்து யார் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டபோது, அந்தக் கும்பலில் இருந்த ஆண் வேகமாக ஓடி வந்து என்னை தள்ளி விட்டான். நான் அவனது முதுகைப் பிடித்து நிறுத்தினேன்.
இதையடுத்து இரு பெண்களி்ல் ஒருவர் ஸ்டீல் சேரையும், இனனொரு பெண் இரும்புக் கம்பியையும் எடுத்துக் கொண்டு என்னைத் தாக்கினர். இதனால் நான் நிலை குலைந்து கீழே விழுந்தேன்.
அந்த ஆண் என் மீது ஏறி அமர்ந்து கொண்டு தாக்கினான். எனது முகத்தில் குத்தியபடியே உன்னைக் கொல்லாமல் விட மாட்டேன் என்று அவன் கத்தினான்.
அப்போது சத்தம் கேட்டு எனது மனைவி கீழே வந்தார். அதைப் பார்த்த அந்தப் பெண்கள் எனது மனைவியிடம் சென்று கேலி செய்தனர். அவரது உடைகளை கழற்ற முயன்றனர். நான் விரைந்து சென்று எனது மனைவியைக் காக்க முயன்றேன். அப்போது என் மீது மேலும் பல அடிகள் விழுந்தன என்றார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸார் உறுதிப்படுத்தவில்லை. ஆஸ்திரேலிய மீடியாவிலும் எந்த செய்தியும் வரவில்லை.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications