மோகன் மறைவு-புறக்கணித்த நாடாளுமன்றம்!

கரும்புக்கு விலை நிர்ணயிப்பது தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டம் தொடர்பாக எதிர்க் கட்சிகள் பிரச்சனை செய்து கூச்சல், குழப்பம் ஏற்படுத்தியதால் மக்களவையை சபாநாயகர் மீரா குமார் 12 மணி வரை ஒத்தித்தார்.
ஆனால், மீண்டும் அவை மீண்டும் கூடிய போதும் கூச்சல் தொடர்ந்ததால் அவையை நாள் முழுவதற்கும் ஒத்திவைத்து உத்தரவிட்டார் சபாநாயகர்.
முன்னதாக உத்தரபிரதேச மாநிலம் பெரோஸாபாத் லோக்சபா தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ராஜ் பப்பார் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
பின்னர் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி உள்ளிட்ட மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதே போல ராஜ்சபாவில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
புறக்கணிக்கப்பட்ட மோகன்:
ஆனால், மறைந்த முன்னாள் மதுரை எம்.பி. மோகனின் மறைவுக்கு லோக்சபாவில் இன்று இரங்கல் தெரிவிக்கப்படவில்லை. அதேபோல நீலகரி நிலச்சரிவு சம்பவத்திற்கும் இரங்கல் தெரிவிக்கப்படவில்லை.
முன்னாள் மத்திய அமைச்சர் பி.உபேந்திரா உள்ளிட்டோரின் பெயர்கள் லோக்சபா அஞ்சலிக் குறிப்பில் இடம் பெற்றிருந்தது. ஆனால் முன்னாள் எம்.பி. மோகனின் பெயர் இடம் பெறவில்லை.
அதேபோல கேரளாவில் படகு விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி தெரிவிக்கப்பட்டது. ஆனால் 40க்கும் மேற்பட்டோர் நீலகிரியில் மண் சரிவில் சிக்கி இறந்த சம்பவம் தொடர்பாக இரங்கல் தெரிவிக்கப்படவில்லை.
ராஜ்யசபாவில் அதிமுக உறுப்பினர்கள் மட்டுமே இதைச் சுட்டிக் காட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழகத்தைச் சேர்ந்த மற்ற கட்சியினர் ஏனோ இதுகுறித்து எதுவும் பேசவில்லை.
அடுத்த மாதம் 22ம் தேதி வரை நடைபெறும் இந்தக் கூட்டத் தொடரில் அமெரிக்க தீவிரவாதியும் லஷ்கர் ஏ தொய்பா அமைப்பும் இணைந்து இந்தியாவில் தாக்குதல் நடத்த தீட்டிய சதித் திட்டம், அதை விசாரிக்க விடாமல் அமெரிக்கா போட்டு வரும் தடைகள், திபெத் சீனாவுக்கே சொந்தம் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறிய கருத்து,
தீவிரவாதிகள்- இந்தித் திரையுலகினர் தொடர்பு, நக்ஸல் விவகாரங்கள், விலைவாசி உயர்வு, ஸ்பெக்ட்ரம் ஊழல், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடாவின் ஊழல் விவகாரம் ஆகியவற்றை பாஜக, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கிளப்பவுள்ளன.
இலங்கைத் தமிழர் பிரச்சனை, முல்லைப் பெரியாறு அணை விவகாரம் ஆகியவை குறித்தும் தமிழக எம்பிக்கள் பிரச்சனை கிளப்பவுள்ளனர்.
மேலும் பாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரித்த லிபரான் குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் மோதல் ஏற்படலாம்.
அதே போல மகாராஷ்டிர சட்டசபையில் இந்தியில் பேச எழுந்துள்ள பிரச்சனை குறித்து லாலு, முலாயம் கட்சியின் எம்பி்க்களுக்கும் சிவசேனாவுக்கும் பாஜகவுக்கும் இடையே மோதல் மூளலாம்.
இந்த சூடான விஷயங்கள் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரில் உஷ்ணம் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பல்வேறு மசோதாக்கள், சட்டத் திருத்தங்களில் இதில் கொண்டு வந்து நிறைவேற்றப்படும்.
ஆனால், பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பான மசோதாவை அரசு இந்தக் கூட்டத் தொடரிலாவது கொண்டு வருமா என்பது தெரியவில்லை.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்











Click it and Unblock the Notifications