தேசபக்தியை காட்டியதற்கு பரிசா இது?-மகேஷ் பட்

மகேஷ் பட்டின் மகன் ராகுல் பட்டுக்கும், இந்தியாவுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டிய ஹெட்லிக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து தெரிய வந்து பரபரப்பாகியுள்ளது.
இதையடுத்து ராகுல் பட் மும்பையை விட்டு வெளியேறக் கூடாது என போலீஸார் தடை விதித்துளளனர்.
இந்த நிலையில் தற்போது நடந்து வரும் நிகழ்வுகள் தங்களுக்கு பெரும் வேதனையாகவும், பெயரைக் கெடுக்கும் வகையிலும் இருப்பதாக மகேஷ் பட் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து மகேஷ் பட் கூறுகையில்,
எனது மகன் ராகுல் பட் தானாகவே முன்வந்து ஹெட்லி குறித்த தகவல்களை போலீஸாரிடம் பகிர்ந்து கொண்டார். ஆனால் தற்போது எனது மகன் நடத்தப்பட்டு வரும் விதம் மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை.
நானும், எனது மகனும், எனது குடும்பத்தினரும் சந்தித்து வரும் கஷ்டங்களை பிரதமரிடத்தில் விளக்கியுள்ளேன். பொறுப்பான ஒரு இந்தியக் குடிமகனாக நடந்து கொண்டதற்காக நாங்கள் சந்தித்து வரும் விளைவுகளை வேதனையுடன் எடுத்துரைத்துள்ளேன்.
சரி செய்ய முடியாத அளவுக்கு எங்களது பெயர் கெடுக்கப்பட்டு விட்டது. மிகப் பெரிய துரோகமாக இதை நாங்கள் கருதுகிறோம்.
பிரதமர் இந்த விவகாரத்தில் தலையிட்டு தவறுகளை சரி செய்ய முன்வர வேண்டும். இல்லாவிட்டால், எந்த இந்தியக் குடிமகனும், தங்களுக்குத் தெரிந்த தகவல்களை போலீஸாரிடம் தெரிவிக்க தயங்கும் மோசமான நிலை ஏற்படும் என்று தெரிவித்துள்ளேன் என்றார் மகேஷ் பட்.
ராகுல் பட் மூலம்தான் ஹெட்லிக்கு பாலிவுட்டில் பலருடன் தொடர்பு ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து ராகுல் பட்டை இந்த வழக்கில் ஒரு சாட்சியாக தேசிய புலனாய்வு ஏஜென்சி சேர்த்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications