பயணிக்கு நெஞ்சுவலி-தரையிறங்கிய விமானம்
சென்னை: சென்னையிலிருந்து கொழும்பு புறப்பட்டுச் சென்ற விமானத்தில் பயணி ஒருவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து ஏர் லங்கா விமானம் இன்று காலை 10.30 மணியளவில் 267 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது.
புறப்பட்ட 10 நிமிடங்களில் விமானத்தில் இருந்த ரஃபி அகமது (வயது 52) என்ற பயணிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக விமானம் மீண்டும் சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
விமான நிலைய மருத்துவர்கள் விரைந்து சென்று அவருக்கு மருத்துவ சிகிச்சை அளித்தனர். பின்னர் 11.30 விமானம் புறப்பட்டுச் சென்றது.
இறக்கிவிடப்பட்ட போதை பயணி:
இந் நிலையில் சென்னையில் இருந்து பாங்காங் செல்லும் தாய் ஏர்லைன்ஸ் விமானம் நேற்றிரவு 12 மணிக்கு புறப்பட தயாரானது.
இந்த விமானத்தில் ஏற முயன்ற தென் கொரியா நாட்டைச் சேர்ந்த ஜிம்சன் என்ற பயணி தள்ளாடியபடி வந்தார். அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்திருந்தார்.
தமிழ்நாட்டை சுற்றிப்பார்க்க வந்திருந்த ஜிம்சன் நிற்க கூட முடியாத அளவுக்கு அதிக போதையில் இருந்ததாக தெரிகிறது. இதையடுத்து தாய் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் அவரை விமானத்தில் ஏற்ற மறுத்தனர்.
இதை ஏற்க மறுத்து ஜிம்சன் கடும் வாக்குவாதம் செய்தார். இதனால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஜிம்சனை சில அதிகாரிகள் சமரசம் செய்தனர். அதிக போதையில் பயணம் செய்வது நல்லது அல்ல என்று அறிவுறுத்தினார்கள். நீண்ட நேரத்துக்கு பிறகு ஜிம்சன் சமரசமானார்.
இதையடுத்து ஜிம்சனை விட்டு விட்டு தாய் ஏர்லைன்ஸ் விமானம் பாங்காங் புறப்பட்டுச் சென்றது.
சென்னை ஹோட்டலில் தங்க வைக்கப்பட்ட ஜிம்சன்
இன்றிரவு 12.15 மணிக்கு பாங்காங் செல்லும் விமானத்தில் அனுப்பி வைக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications