2வது முறையாக ஆப்கன் அதிபரானார் கர்சாய்
Subscribe to Oneindia Tamil
காபூல்: ஆப்கன் அதிபராக ஹமீத் கர்சாய் மீண்டும் பதவியேற்றுக் கொண்டார்.
காபூலில் உள்ள அதிபர் மாளிகையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கர்சாய்க்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அப்துல் சலாம் ஆஸ்மி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
கர்சாய் பதவியேற்பு நிகழ்ச்சியில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் உட்பட 800 சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டனர்.
தலிபான்கள் தாக்குதல், ஊழல், தேர்தல் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு புகார்கள், பிரச்சனைகளுக்கு மத்தியில் ஹமீத் கர்சாய் இரண்டாவது முறையாக அதிபராகப் பதவியேயேற்றள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications