ஸ்வைன்: மருத்துவமனையில் அனுமதிக்காமல் வீட்டுக்கு அனுப்புகின்றனர்-ஜெ. புகார்

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கோவை மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சல் நோயால் இதுவரை 600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் நூற்றுக்கணக்கானோர் விஷக் காய்ச்சலால் அவதிப்பட்டு வருவதாகவும்,
பன்றிக் காய்ச்சல் சோதனை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டும்தான் மேற்கொள்ளப்படுகிறது என்றும், பன்றிக் காய்ச்சல் நோய் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வதற்கே 7 நாட்கள் ஆகிறது என்றும், முகக் கவசங்கள் அளிக்கப்படுவதில்லை என்றும், இம்மாவட்டத்தைச் சேர்ந்த மக்களிடமிருந்து புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.
இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்காமல், மாத்திரைகளை தந்து அவர்களை வீட்டுக்கு அனுப்பிவிடக் கூடிய அவல நிலை காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் ஒரு வாரத்திற்கு முன்பே கோவை மாவட்ட ஆட்சித் தலைவரை நேரில் சந்தித்து பன்றிக் காய்ச்சல் நோயைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும்,
இலவச பரிசோதனை நிலையங்களை அமைக்கவும் வலியுறுத்திய போதிலும், மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. நாளுக்கு நாள் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கூடுதலாகிக் கொண்டே செல்கிறது.
பன்றிக் காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான சிகிச்சை அளிக்க வலியுறுத்தியும், பன்றிக்காய்ச்சல் நோய் மேலும் பரவாமல் தடுக்க வலியுறுத்தியும், இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வலியுறுத்தியும்,
கோவை மாநகர் மற்றும் கோவை புறநகர் மாவட்டக் கழகங்களின் சார்பில், நாளை கழக தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், எம்.எல்.ஏ. தலைமையில் கோவை மத்திய பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
ராமநாதபுரத்தில் சுகாதார சீர்கேடு:
அதேபோல ராமநாதபுரம் நகரத்தில் சுகாதார சீர்கேட்டை உருவாக்கியுள்ள நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், பாதாள சாக்கடைத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும், நாளை கழகப் பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் ராமநாதபுரம் அரண்மனை வாயில் முன் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications