சிறார்களுடன் செக்ஸ் வைத்தேன்: டச்சு நபர் வாக்குமூலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறார்கள் மீது எனக்கு மோகம் பிறந்ததால் அவர்களுக்கு கிப்ட் கொடுத்து வசீகரித்து அவர்களுடன் தவறாக நடந்து கொண்டேன். ஆபாசப் படங்களையும் எடுத்தேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளார் ஹாலந்து நாட்டைச் சேர்ந்த வில்லியம் ஹியூம்.

சிறார்களை ஆபாசமாகப் படம் எடுத்து அதை இன்டர்நெட்டில் வெளியிட்டு வந்தார் ஹியூம். இதையடுத்து அவரைக் கைது செய்ய இன்டர்போல் சென்னை போலீஸாருக்கு தகவல் அனுப்பியது. இதன் பேரில் ஹியூம் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் ஏற்கனவே மகாபலிபுரத்தில் சிறார்களிடம் தவறாக நடந்து கொண்டு பெரும் சர்ச்சையில் சிக்கி தலைமறைவானவர் ஆவார். பல ஆண்டுகளாக ஹியூம் சென்னையில் வசித்து வருபவர் ஆவார்.

இந்த நிலையில் போலீஸாரிடம் ஹியூம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது..

சிறார்களுடன் நான் செக்ஸ் வைத்துக் கொள்வது வழக்கம். இதற்காக அவர்களுக்கு கிப்டுகள் கொடுத்து இழுப்பேன்.

மகாபலிபுரத்தில் நான் அனாதை ஆசிரமம் நடத்திவந்தபோது, எனக்கு அந்தப் பகுதி சிறார்கள் எளிதில் கிடைத்தனர். அவர்களுக்கு வீடியோ கேம்ஸ் போட்டுக் காட்டுவேன். கிப்ட் கொடுப்பேன்.

பல ஆண்டுகளாகவே நான் பெண் தொடர்பு இல்லாமல் வாழ்ந்து வந்ததால், துணைவி என்று யாரும் இல்லாததால், இளம் சிறார்கள் மீது எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டு விட்டது.

2002ம் ஆண்டு மகாபலிபுரம் வழக்கிலிருந்து நான் விடுதலையானேன். இதையடுத்து மீண்டும் சிறார் செக்ஸை நான் தொடர ஆரம்பித்தேன்.

இந்த முறை அவர்களை ஆபாசமான கோலத்தில் நிற்க வைத்து புகைப்படம் எடுத்து அதை எனது கம்ப்யூட்டரில் பதிவு செய்து கொண்டேன் என்று கூறியுள்ளார் ஹியூம்.

ஹியூம் கொடுத்த வாக்குமூலத்தை சைதாப்பேட்டை கோர்ட்டில் போலீஸார் தாக்கல் செய்துள்ளனர். இருப்பினும் இந்த சாட்சியம் உண்மையானதே, யாருடைய வற்புறுத்தலின் பேரிலும் இதை நான் சொல்லவில்லை என்று கோர்ட்டில் ஹியூம் ஒத்துக் கொண்டால்தான் இது சட்டப்படி செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் சில தினங்களுக்கு முன்பு தான் எந்தத் தவறும் செய்யவில்லை. ஹாலந்துக்குத் திரும்பிச் செல்ல விரும்புகிறேன் என்று ஹியூம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்து. ஆனால் ஹியூமுக்கு எதிரான அனைத்து ஆதாரங்களையும் திரட்டியுள்ளதாக போலீஸ் தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

ஜாமீன் மறுப்பு...

இதற்கிடையே ஜாமீன் கோரி ஹியூம் தாக்கல் செய்த மனுவை சைதாப்பேட்டை கோர்ட் நேற்று தள்ளுபடி செய்து விட்டது.

விசாரணை தொடக்க கட்டத்தில் உள்ளதால் ஹியூமை விடுவிக்க போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற மாஜிஸ்திரேட், ஹியூமின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டார்.

இதையடுத்து மீண்டும் 15 நாள் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார் ஹியூம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+