'ராஜபக்சே'..என பெயர் மாற்ற சிங்களர்கள் ஆர்வம்
கொழும்பு: தங்களது பெயர்களுக்குப் பின்னால் ராஜபக்சே என போட்டுக் கொள்ள சிங்களர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனராம். இதனால் பெயர் மாற்றத்தைப் பதிவு செய்ய பதிவாளர் அலுவலகங்களில் கூட்டம் அலை மோதுகிறதாம்.
ஈழப் போரின் முடிவைத் தொடர்ந்து சிங்களர்கள் மத்தியில் ஹீரோவாகி விட்டார் ராஜபக்சே. இந்தப் போரின் வெற்றி பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிரைப் புதைத்து விட்டு கிடைத்தது என்பதை அவர்கள் பெரிதாக நினைக்கவில்லை.
மாறாக, தமிழ் இனத்தை ஒடுக்கிய ஹீரோவாக பார்க்கப்படுகிறார் ராஜபக்சே. இதனால் அவரது பெயரை தங்களது பெயர்களுக்குப் பின்னால் சேர்த்துக் கொள்ள சிங்களர்களிடையே பேரார்வம் காணப்படுகிறதாம்.
பெயர் மாற்றத்தைப் பதிவு செய்வதற்காக பெரும் கூட்டம் அலைமோதுகிறதாம். இதுகுறித்து பெயர்ப் பதிவு அலுவலக ஆணையர் கூறுகையில், எனது 30 வருட சர்வீஸில் இப்படி ஒரு பெயர் மாற்ற கூட்டத்தை நான் பார்த்ததில்லை என்கிறார்.
இதற்கிடையே, ராஜபக்சே என்ற பெயருடன் வருபவர்களுக்கு விசேஷ சலுகைகள் வழங்கப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசு அலுவலகங்கள், நிறுவனங்களில் ராஜபக்சே என்ற பெயருடன் இருப்பவர்களுக்கு ஏகப்பட்ட சலுகைகளை அள்ளிக் கொடுக்கிறார்களாம். இதற்காக பலரும் தங்களது பெயர்களுக்குப் பின்னால் ராஜபக்சே என்று சேர்த்துக் கொள்ள ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications