தூத்துக்குடியில் ரூ. 209 கோடி திட்டங்கள்-ஸ்டாலின் துவக்கி வைத்தார்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ. 209 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
துணை முதல்வர் ஸ்டாலின் தூத்துக்குடி வந்தார். எட்டையாபுரம் அருகே உள்ள ராமனூரில் ரூ.2.75 கோடியில் கட்டப்பட்ட பெரியார் நினைவு சமத்துவபுரத்தை திறந்து வைத்தார். பின்னர் மேல அரசடியில் இருந்து கன்னிராஜாபுரம் வரையில் ரூ.7.85 கோடியில் 48.75 கி.மீ தூரத்திறகு அமைக்கப்பட்டுள்ள கிழக்கு கடற்கரை சாலையை திறந்து வைத்தார்.
தொடர்ந்து தூத்துக்குடியில் 3ம் கேட் பகுதியில் ரூ.19 கோடியில் அமைக்கப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலம், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ரூ.18.17 கோடியில் 500 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடத்தையும் திறந்து வைத்தார்.
பின்னர் தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகே நடந்த அரசு விழாவில் 1125 சுய உதவி குழுக்களுக்கு ரூ.10 ஆயிரம் மானியம் உட்பட 7.28 கோடி மதிப்பிலான கடனுதவியையும், ரூ.14.02 கோடியில் 11 ஆயிரத்து 2 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் துணை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
மொத்தம் ரூ. 79.22 கோடியில் 170 பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.116 கோடியில் 623 நிறைவேற்றப்பட்ட பணிகளையும் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications