அமளி: இரு அவைகளும் ஒத்திவைப்பு
டெல்லி: குளிர்கால கூட்டத்தொடரின் 2வது நாளான இன்று மக்களவை தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே ஒத்திவைக்கப்பட்டது.
கரும்பு விலை நிர்ணய சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சமாஜ்வாடி கட்சி எம்பி்க்கள் அவையின் மையத்தில் கூடி அமளி செய்தனர்.
அவர்களுடன் பிற எதிர் கட்சி எம்பிக்களும் அமளியில் ஈடுபட்டதால் அவையை சபாநாயகர் மீரா குமார் ஒத்திவைத்தார்.
அதே போல மாநிலங்களவையும் அமளியால் ஒத்தி வைக்கப்பட்டது.
ராகுல் சொன்னார்.. பிரதமர் தலை ஆட்டினார்:
இந் நிலையில் கரும்பு கொள்முதல் விலை தொடர்பான அவசரச் சட்டத்தி்ல் தேவைப்பாட்டால் திருத்தம் செய்யப்படும் என்று ராகுல் காந்தியிடம் பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்தார்.
கரும்பு கொள்முதல் விலை தொடர்பான அவசரச் சட்டம் நாடாளுமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டது. மேலும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் பேரணி நடத்தி தலைநகரை உலுக்கினர்.
இதையடுத்து விவசாயிகளின் ஓட்டுக்களை இழக்கும் அபாயம் இருப்பதாக அச்சமடைந்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார்.
இதையடுத்து இந்தச் சட்டத்தில் தேவைப்பட்டால் திருத்தம் கொண்டு வரப்படும் என்று ராகுல் காந்தியிடம் பிரதமர் உறுதி அளித்தார்.
விவசாயிகளுக்கு எதிரான எந்த செயலையும் அரசு செய்யாது என ராகுல் காந்தியிடம் பிரதமர் தெரிவித்ததாக காங்கிரஸ் பொதுச் செயலாளரும் ராகுலின் அட்வைசராகக் கருதப்படுபவருமான திக்விஜய் சிங் கூறியுள்ளார்.
ஆனால், பிரதமருடனான சந்திப்பு குறித்து ராகுல் காந்தி எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்கவில்லை. தனிப்பட்ட முறையில் தான் பிரதமருடன் பேசியதாகவும், இதுபோல் அடிக்கடி அவரை சந்திப்பதுண்டு எனவும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இந் நிலையி்ல இந்த சட்டத்தை திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளும், அனைத்து எதிர்க்கட்சிகளும் கடுமையாக எதிர்ப்பதால், வரும் திங்கள்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி முடிவெடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சட்டம் சொல்வது என்ன?:
மத்திய அரசு கரும்புக்குக் கொள்முதல் விலையை நிர்ணயித்த பிறகு அதைவிட அதிகமாக மாநில அரசு ஏதேனும் விலையை நிர்ணயித்தால் அந்த விலையை மாநில அரசுதான் தர வேண்டும் என்று இந்த அவசரச் சட்டம் கூறுகிறது. தேசிய அளவில் கரும்புக்கு ஒரே விலையை நிர்ணயித்து குழப்பங்களை போக்க இந்தச் சட்டம் உதவும். மேலும் சர்க்கரை விலையை சரியாக நிர்ணயிக்கவும் இந்த சட்டம் உதவும்.
ஆனால், விவசாயிகளின் ஓட்டுக்களை மனதில் வைத்துக் கொண்டு இதை திமுகவும், பிற கட்சிகளும் எதிர்க்கின்றன.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? திருமாவளவன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications