கள்ளநோட்டு கும்பல் கோவில்பட்டியில் கைது
கோவில்பட்டி: நெல்லை, தூத்துக்குடியில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2.73 லட்சத்துக்கான கள்ளநோட்டுகள் பறி்முதல் செய்யப்பட்டது.
கோவில்பட்டி இளையரேனேந்தல் பைபாஸ் ரோடு சந்திப்பில் போலீசார் ரோந்து சென்றபோது சந்தேகப்படு்ம் படி சுற்றிக்கொண்டிருந்த 3 பேர் சிக்கினர். அவர்களை பிடித்து போலீசார் விசாரித்தபோது, அவர்கள் பின்னுக்கு பின் முரணான தகவல்களை கூறினர்.
தொடர் விசாரணையில், மூன்று பேரும் கள்ளநோட்டு கும்பல் என தெரியவந்தது. தூத்துக்குடி டூவிபுரம் துரைராஜ் மகன் குருமூர்த்தி, அவரது உறவினர் நெல்லை ஜங்ஷனை சேர்ந்த அண்ண்மலை மகன் அய்யம்பெருமாள் மற்றும் சங்கரன்கோவில் தேவர்குளத்தை சேர்ந்த விஜயபாண்டி மகன் முருகன் ஆகிய இந்த மூவரும் 50, 100, 500, 1000 என கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டது தெரியவந்தது.
மூன்றுபேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 500 ரூபாய் கள்ள நோட்டுகள் 500ம், 100 ரூபாய் கள்ள நோட்டுகள் 15 என மொத்தம் ரூ. 2 லட்சத்து 51 ஆயிரத்து 500 கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கோவில்பட்டி இளையரேனேந்தல் ரோடு ராதாகிருஷ்ணன் நகர் அருகில் உள்ள வீட்டை சோதனையிட்டபோது அங்கு புத்தம்புதிதாக அச்சடித்து வெட்டப்படாத நிலையில் இருந்த 1000 ரூபாய் கள்ள நோட்டுகள் 14ம், 500 ரூபாய் கள்ள நோட்டுகள் 12ம், 100 ரூபாய் கள்ள நோட்டுகள் 14ம், 50 ரூபாய் கள்ள நோட்டுகள் 2ம் என மொத்தம் 21 ஆயிரத்து 500ஐ பறிமுதல செய்தனர்.
மேலும் கள்ள நோட்டு அச்சடிக்க பயன்படுத்திய லேசர் பிரிண்டர் மிஷின், ஸ்கேன், பிலிம், அச்சடிக்கும் பேப்பர் முதலியன கைப்பற்றப்பட்டன. கள்ள நோட்டுகளை அச்சடிக்கும் பணியில் ஈடுபட்ட சிவகாசி சாத்தையாபுரத்தை சேர்ந்த லட்சுமணன், சாரதா நகரை சேர்ந்த சலீம் ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications