மதுராந்தகத்தில் சிக்னல் கோளாறு-ரயில்கள் தாமதம்
சென்னை: மழை காரணமாக மதுராந்தகம் ரயில் நிலையத்தில் சிக்னலில் கோளாறு ஏற்பட்டது. இதனால் சென்னை ரயில்கள் பெரும் தாமதத்தை சந்தித்தன. இதனால் பயணிகள் பெரும் அவதி அடைந்தனர்.
மதுராந்தகம் ரயில் நிலையம் அருகில் சிக்னல் கோளாறு ஏற்பட்டதால் சிக்னல் கிடைக்காமல் ரயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. தானாக இயங்கக் கூடிய சிக்னலில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக சென்னை நோக்கி வந்த அனைத்து ரயில்களும் ஆங்காங்கே வழியில் நிறுத்தப்பட்டன.
பின்னர் சிக்னலில் ஏற்பட்ட கோளாறை தொழில் நுட்ப கலைஞர்கள் சரி செய்தனர். அதன் பிறகு தென் மாவட்டத்தில் இருந்து வந்த ரயில்கள் ஒவ்வொன்றாக புறப்பட்டு வந்தன. இதனால் ஒரு மணி நேரம் தாமதமாக எழும்பூர் ரயில் நிலையத்துக்கு ரயில்கள் வந்து சேர்ந்தன.
திருச்சி மலைக்கோட்டை, நெல்லை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி, பாண்டியன் எக்ஸ்பிரஸ், முத்துநகர், ராமேஸ்வரம், அனந்தபுரி உள்ளிட்ட எல்லா ரயில்களும் தாமதமாக வந்தன.
இதன் காரணமாக பயணிகளும், அவர்களை வரவேற்க காத்திருந்த உறவினர்களும் பெரும் அவதியடைந்தனர்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications