எதிர்க்கட்சித் தலைவர்: அத்வானிக்கு பதில் சுஷ்மா
ஹைதராபாத்: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலக அத்வானி விருப்பம் தெரிவித்துள்ளார். இப்போது எதிர்க்கட்சித் துணைத் தலைவராக உள்ள சுஷ்மா ஸ்வராஜ் இந்தப் பொறுப்பை ஏற்கலாம் என்று தெரிகிறது.
ஹைதராபாத்தில் நிருபர்களிடம் பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு,
பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கின் பதவி காலம் முடிவுறுவதையொட்டி அடுத்த தலைவராக மகாராஷ்டிர பாஜக தலைவர் நிதின் கட்காரி தேர்வு செய்யப்படலாம் என்பது யூகத்தின் அடிப்படையில் வெளியான செய்தியாகும்.
புதிய தலைவர் குறித்து கட்சியில் இதுவரை இறுதி முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை. புதிய தலைவர் ஒருமனதாகத் தேர்வு செய்யப்படுவார். புதிய தலைவரைத் தேர்வு செய்யும் வரை ராஜ்நாத் சிங் தலைவர் பதவியில் தொடந்து நீடிப்பார். புதிய தலைவரைத் தேர்வு செய்வது குறித்து கட்சிதான் இறுதி முடிவு எடுக்குமே தவிர வேறு யாரும் இது குறித்து முடிவு செய்ய முடியாது. (அதாவது ஆர்எஸ்எஸ் தலையிடாதாம்.. பாஜகவே முடிவெடுக்குமாம்)
கர்நாடகத்தில் கட்சியில் ஏற்பட்ட உட்பூசலைத் தொடர்ந்து தென் மாநிலங்களை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். கர்நாடக விவகாரம் கட்சித் தலைமைக்கு மனவேதனையை அளித்தது. எனினும் பாஜக தேசிய கட்சி என்பதால் இந்த விவகாரத்தை எளிதில் கையாண்டது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக உள்ள அத்வானி, அப்பதவியிலிருந்து விரைவில் விலக விருப்பம்
தெரிவித்துள்ளார் என்றார்.
தற்போது மக்களவை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக உள்ள சுஷ்மா ஸ்வராஜ் அப்பொறுப்பை ஏற்கலாம் என்று சூசகமாகத் தெரிவித்தார்.
பெங்களூரில் நாளை ஆர்.எஸ்.எஸ். மாநாடு:
கர்நாடக பாஜகவில் பெரும் குழப்பம் நிலவி வரும் நிலையில் பெங்களூரில் நாளை ஆர்எஸ்எஸ் மாநாடு நடக்கிறது.
இதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பங்கேற்கிறார்.
பெங்களூர் அரண்மனை மைதானத்தில் நடக்கும் இம் மாநாட்டில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் சீருடையுடன் கலந்து கொள்கின்றனர்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications