உத்தப்புரத்தில் கோஷ்டி மோதல்-வீடுகள் சேதம்
மதுரை: ஜாதிக் கலவரத்தால் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மதுரை மாவட்டம் உத்தப்புரம் கிராமத்தில் இரு கோஷ்டிகளுக்கு இடையே மோதல் மூண்டது. இதில் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதையடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ளது உத்தப்புரம். இங்கு தலித் மக்களுக்கும், இன்னொரு ஜாதியினருக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் இருந்து வருகிறது. இதன் காரணமாக ஊருக்கு நடுவே சுவர் எழுப்பிய விவகாரம் நாட்டையே உலுக்கியது.
இந்த நிலையில் அங்கு நேற்று திடீரென கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
உத்தப்புரம் தெற்குத்தெருவைச் சேர்ந்த பொன்னையா அந்தப் பகுதி பள்ளியின் பெற்றோர்- ஆசிரியர் சங்கத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதற்கு அப்பகுதி ஊராட்சி மன்றத் தலைவரான புஷ்பம் என்பவரின் கோஷ்டியைச் சேர்ந்த பாண்டி எதிர்ப்புத் தெரிவித்தார்.
இதையடுத்து இருதரப்பினருக்கும் பிரச்சினை வெடித்தது. இது நேற்று மோதலாக மாறியது. இருதரப்பினரும் மோதிக்கொண்டனர். இதில் பல வீடுகள் சேதம் அடைந்தன.
இதையடுத்து பொன்னையா தரப்பு போலீஸில் புகார் கொடுத்தது. இதையடுத்து ஊராட்சி மன்றத் தலைவர் புஷ்பம் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதேபோல புஷ்பம் தரப்பினர் அளித்த புகாரின்பேரில் எதிர்தரப்பைச் சேர்ந்தவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை 26 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications