மசூதி இடிப்பு: ஆர்எஸ்எஸ்-கல்யாண்-உமாவுக்கு தொடர்பு: வாஜ்பாய்-அத்வானி 'போலி மிதவாதிகள்'

900 கொண்ட இந்த அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கர சேவகர்கள் லட்சக்கணக்கில் குவிந்துவிட்ட நிலையில் அங்கு பாதுகாப்பை பலப்படுத்தவோ, மசூதி இடிக்கப்படுவதைத் தடுக்க மத்தியப் படைகளின் உதவியையோ அவர் நாடவில்லை.
கடைசிவரை நிலைமை கட்டுக்குள் இருப்பதாக மத்திய அரசிடம் கூறிக் கொண்டிருந்தார். மேலும் மசூதி இடிக்கப்படும் வரை அதைக் கண்டுகொள்ளாத வகையில், பாஜகவுக்கு ஆதரவான அதிகாரிகளையும் போலீஸ் அதிகாரிகளையும் அவர் நியமித்தார்.
உமா-சுதர்ஷன்-வகேலா-கோவிந்தாச்சார்யா:
மேலும் மசூதி இடிப்புக்கு முக்கிய காரணமான மற்றவர்கள் உமா பாரதி, சங்கர் சிங் வகேலா, கோவிந்தாச்சார்யா, சுதர்ஷன் ஆகியோர் ஆவர். இவர்கள் தான் மசூதி இடிப்பு திட்டத்தை வகுத்தவர். இவர்கள் நினைத்திருந்தால் மசூதி இடிப்பை நிச்சயம் தவிர்த்திருக்கலாம்.
(இப்போது இந்த மூன்று தலைவர்களும் பாஜகவில் இல்லை. வகேலா காங்கிரசில் உள்ளார்).
வாஜ்பாய்-அத்வானி-ஜோஷி:
முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மூத்த பாஜக தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் போலியான மிதவாதிகள் ஆவர். தங்களை மிதவாதிகள் போல வெளியில் காட்டிக் கொண்டு, மசூதி இடிப்புக்கான சூழலை உருவாக்கினர். மசூதி இடிக்கப்படாது என்று இவர்கள் நீதிமன்றத்துக்கும், நாட்டுக்கும் தவறான உறுதிமொழிகளைத் தந்தனர்.
இவர்களால் ஆர்எஸ்எஸ் விதித்த உத்தரவை மீற முடியவில்லை. இதனால் மசூதி இடிப்புக்கு துணை போயினர்.
ஆனால், மசூதி இடிப்புக்கான திட்டத்தை வகுத்தவர்களை இவர்களால் தடுத்திருக்க முடியும்.
ஆர்எஸ்எஸ்:
அயோத்தி இயக்கத்தை உருவாக்கியதும் அதை நடத்தியதும் ஆர்எஸ்எஸ் தான். ஆர்எஸ்எஸ்சும் அதனுடன் மிக நெருங்கிய பாஜகவின் மூத்த தலைவர்களுமே மசூதி இடிப்புக்குக் காரணம்.
ஆர்எஸ்எஸ்சின் இந்தத் திட்டம் வாஜ்பாய், அத்வானி, ஜோஷிக்குத் தெரியாது என்று யாரும் சொல்ல முடியாது.
இவ்வாறு லிபரான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நடவடிக்கை எடுக்க சொல்லவில்லை...
ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூறி அந்த அறிக்கையில் எந்த பரிந்துரையும் இல்லை.
அரசியலில் மதம்-தடுக்க சட்டம் தேவை:
அதே நேரத்தில் மதவாத அரசியலை கட்டுப்படுத்த புதிய சட்டம் கொண்டு வருவது அவசியம் என்று மத்திய அரசுக்கு கமிஷன் யோசனை தெரிவித்துள்ளது. அரசியலில் மதத்தைக் கலப்பவர்களைத் தடுக்கும் வகையில் அந்த சட்டம் இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
மொத்தத்தில் பாஜக, ஆர்எஸ்எஸ், விஎச்பி, பஜ்ரங் தள் அமைப்புகளைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் உள்பட 68 பேர் மீது கமிஷன் குற்றம்சாட்டியுள்ளது.
நரசிம்ம ராவ் ரொம்ப நல்லவர்...
ஆனால், இந்த அறிக்கையில் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது பிரதமராக இருந்த நரசிம்ம ராவின் செயலின்மை குறித்து எதுவும் கூறப்படவில்லை. இது காங்கிரசை காப்பாற்றும் முயற்சியாகவே கருதப்படுகிறது.
நான் தவறு செய்யவில்லை-கல்யாண்:
இந் நிலையில் கல்யாண் சிங் நிருபர்களிடம் பேசுகையில், மசூதி இடிப்பில் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. ர சேகவர்களை தடுத்து நிறுத்துமாறு தான் உரிய உத்தரவைப் பிறப்பி்த்தேன்.
அதே நேரத்தில் கர சேவகர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிடவில்லை. இதன்மூலம் ஆயிரக்கணக்கான கர சேவகர்களின் உயிரைக் காப்பாற்றினேன் என்றார்.
பாஜகவில் இருந்து நீண்ட காலத்துக்கு முன்பே விலகிவிட்ட அவர் இப்போது தனிக் கட்சி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
