ஆஸி. செல்ல முயற்சி-60 தமிழர்களை பிடித்த இலங்கை கடற்படை
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 60 தமிழர்கள் அடங்கிய 2 மீன்பிடி படகுகளை இலங்கை கடற்படை மறித்துப் பிடித்துள்ளது.
இலங்கையின் தென் கடல் பகுதியில் இந்த படகுகளைப் பார்த்த இலங்கை கடற்படையினர் அங்கு விரைந்து சென்று இரு படகுகளையும் மறித்துப் பிடித்தனர்.
ஆஸ்திரேலியா நோக்கி இந்தப் படகுகள் சென்று கொண்டிருந்ததாக இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் அதுல சேனரத் கூறினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், வெளிநாடுகளுக்கு ஆட்களை கடத்துவோரிடம் பெரும் பணத்தைக் கொடுத்து இவர்கள் ஆஸ்திரேலியா செல்ல முயற்சித்தனர்.
இரு படகுகளும், அதில் இருந்தவர்களும் காலே துறைமுக போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications