ஒரு பக்கம் தாக்குதல் - மறுபக்கம் பிரசவம் - பிறந்த நாள் கொண்டாடும் கோலி!
அந்தக் குழந்தையின் பெயர் தேஜஸ்வினி. ஆனால் அதை எல்லோரும் கூப்பிடுவது கோலி எனறுதான். கோலி என்றால் தோட்டா என்று பொருளாம். துப்பாக்கிச் சத்தத்திற்கு மத்தியில் பிறந்ததால் கோலி என்று பெயரிட்டு அழைக்கிறார்கள் அனைவரும்.
இதுகுறித்து தேஜஸ்வினியின் தந்தை ஷாமு செளஹான் கூறுகையில், காமா மருத்துவமனையில் எனது மனைவி பிரசவ வலி ஏற்பட்டு அறுவைச் சிகிச்ச அறையில் கிடத்தப்பட்டிருந்தார்.
அப்போதுதான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். எங்களது அறைக்குச் சில அடிகள் தொலைவில்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். நான் அவர்களை ஜன்னல் வழியாக தெளிவாகப் பார்த்தேன். சிதறிக் கிடந்தன உடல்கள். அனைவரும் பீதியுடன் பதுங்கியிருந்தோம்.
இந்த அமளிக்கு மத்தியிலும் எனது மனைவிக்குப் பிரசவம் நடந்தது. தேஜஸ்வினி பிறந்தாள் என்றார் இன்னும் அந்த அதிர்ச்சி நீங்காத முகத்துடன்.
தேஜஸ்வினியை யாருமே அந்தப் பெயரில் அழைக்க மாட்டேன் என்கிறார்களாம். கோலி என்றுதான் செல்லமாக கூப்பிடுகின்றனர். ஷாமுவும், அவரது மனைவியும் மட்டும்தான் தேஜஸ்வினி என்று கூறுகிறார்களாம். தேஜஸ்வினியின் அண்ணன் (வயது 5) சசிகாந்த் கூட கோலி என்றுதான் கூப்பிடுகிறானாம்.
முதல் பிறந்த நாள் என்றாலும், மும்பைத் தாக்குதலின் சோகம் இன்னும் ஷாமு குடும்பத்தினரிடமிருந்து விலகவில்லை. எனவே இந்த நாளை மிகவும் அமைதியான முறையில் கொண்டாடுகிறார்களாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக













Click it and Unblock the Notifications