ராஜீவ் கொலை வழக்கு- நாளை விசாரணை
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பான வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.
ராஜீவ்காந்தி, கடந்த 1991ல் ஸ்ரீபெரும்புதூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் மனித வெடிகுண்டுக்கு பலியானார். இந்த படுகொலை தொடர்பாக, விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், பொட்டு அம்மன், நளினி உள்ளிட்ட 41 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கு, பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து வந்தது. அப்போது தலைமறைவு குற்றவாளிகள் என்று பிரபாகரனும், பொட்டு அம்மானும் அறிவிக்கப்பட்டனர். மேலும் அவர்கள் மீதான வழக்கு தனியாக பிரிக்கப்பட்டது.
மீதமிருந்த 26 பேர் மீதான வழக்கு மட்டும் விசாரிக்கப்பட்டு 1998ல் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட பிரபாகரன், பொட்டு அம்மன் ஆகியோர் தொடர்பாக மேல் விசாரணை நடத்த வேண்டும் என்ற ஜெயின் கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில், பல்நோக்கு புலனாய்வு குழுவிடம் அந்த பணி ஒப்படைக்கப்பட்டது.
இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. தற்போது இந்த வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
இலங்கையில் போர் முடிவடைந்து விட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. மேலும், பிரபாரகன், பொட்டு அம்மான் உள்ளிட்டோர் கொல்லப்பட்டு விட்டதாகவும் அது கூறியுள்ளது. அதேசமயம், இதுதொடர்பான இந்தியா கோரியருந்த மரணச் சான்றிதழை இதுவரை இலங்கை தரவில்லை.
இந்த நிலையில், நாளை பிரபாகரன், பொட்டு மீதான ராஜீவ் கொலை வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications