முதலிரவில் புதுமாப்பிள்ளை தற்கொலை: பெரும் சோகத்தில் புதுப் பெண்!
சேலம்: சேலத்தில் கல்யாணமான முதல் நாள் இரவில் மாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டார். இதனால் புதுப் பெண் பெரும் சோகத்திலும், அதிர்ச்சியிலும் மூழ்கினார்.
சேலம் மணக்காடு பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் (29). சென்னை நந்தனத்தில் உள்ள வங்கியில் பணியாற்றி வந்தார்.
இவருக்கும், சேலம் அஸ்தம்பட்டியைச் சேர்ந்த பூர்ணிமா என்பவருக்கும் நேற்று காலை ஏற்காட்டில் கல்யாணம் நடந்தது. பின்னர் புது ஜோடி, பூர்ணிமா வீட்டிற்கு சென்றது. அங்கு முதலிரவுக்கான ஏற்பாடுகள் நடந்தன.
இன்று காலை பூர்ணிமா கண் விழித்து எழுந்தபோது தாமோதரன் மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி பிணமாக காணப்பட்டார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பூர்ணிமா அலறினார்.
உறவினர்கள் ஓடி வந்து பார்த்து அலறினர். பின்னர் தாமோதரன் வீட்டினருக்குத் தகவல் போய் அவர்கள் ஓடி வந்தனர். அனைவருக்கும் தாமோதரன் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பதற்கான காரணம் தெரியவில்லை.
தற்கொலைக்கு முன்பு தனது செல்போனில் ஐ லவ் யூ பூர்ணிமா, ஐ ஏம் சாரி என்று டைப் அடித்து வைத்துள்ளார் தாமோதரன்.
இந்த சம்பவத்தால் பெரும் சோகமும், பரபரப்பும் ஏற்பட்டது. போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications