இலங்கையில் சிறை வைக்கப்பட்ட 18 புதுக்கோட்டை மீனவர்கள் விடுவி்ப்பு
ராமேஸ்வரம்: இலங்கைக் கடற்படையினரால் கடத்திக் கைது செய்யப்பட்டு இலங்கையில் சிறை வைக்கப்பட்ட 18 புதுக்கோட்டை மீனவர்களை விடுவிக்க அந்த நாட்டு கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து அவர்கள் தமிழகம் அழைத்து வரப்படுகிறார்கள்.
கடந்த வாரம் இந்த மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் வலுக்கட்டாயமாக பிடித்துச் சென்று விட்டனர்.
பின்னர் அவர்கள் போலீஸில் ஒப்படைக்கப்பட்டு கைது செய்யபப்ட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் இவர்களை இலங்கை கோர்ட்டில் போலீஸார் ஆஜர்படுத்தினர். அப்போது 18 பேரையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து இலங்கைக் கடற்படையினர் தனுஷ்கோடி அருகே சர்வதேச கடல் எல்லைக்கு இவர்களைக் கொண்டு வந்து இந்திய கடலோரக் காவல் படையினரிடம் ஒப்படைத்தனர்.
அவர்களைப் பெற்றுக் கொண்ட கடலோரக் காவல் படையின் உதவி கமாண்டர், புதுக்கோட்டை மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குநரிடம் மீனவர்களை ஒப்படைத்தார்.
இதையடுத்து மீனவர்கள் புதுக்கோட்டைக்குக் கிளம்பிச் சென்றனர்.












Click it and Unblock the Notifications