பாமக ஓட்டுகளை பங்கு போட தி்முக, அதிமுக தீவிரம்

ஐந்து தொகுதி இடைத் தேர்தலை அதிமுக அன்று புறக்கணித்தது. இதையடுத்து அதிமுகவின் வாக்குகளை திமுகவும், தேமுதிகவும் செமத்தியாக சாப்பிட்டன. இதனால் அதிமுக வட்டாரம் அதிர்ச்சி அடைந்தது.
இந்த நிலையில் தற்போது வந்தவாசியில் காட்சி மாறியுள்ளது. வன்னியர் பெல்ட்டில் வரும் வந்தவாசி தொகுதியில் தற்போது பாமக இடைத் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. தனது கட்சியினர் 49 ஓ விண்ணப்பத்தை பூர்த்தி செய்து யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்று தெரிவிக்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார்.
ஆனால் இந்த உத்தரவை நிச்சயம் பாமகவினர் நிறைவேற்றுவார்கள் என்பது நிச்சயமல்ல. காரணம், இது பண பலம் கோலோச்சும் காலம். எனவே பாமகவின் வாக்குகளை அள்ளி விட திமுகவும், அதிமுகவும் களம் இறங்கியுள்ளன.
குறிப்பாக திமுக முகாம்தான் இதில் படு வேகமாக களம் குதித்துள்ளதாக தெரிகிறது. பாமக நிர்வாகிகளை ரகசியமாகவும், பகிரங்கமாகவும் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல அதிமுக தரப்பும் பாமக நிர்வாகிகளை வளைக்க ஆள் அம்பு பரிவாரங்களை ஏவியுள்ளதாம். இருப்பினும் திமுக ஆளுங்கட்சி என்பதால் ஆதாயங்கள் அதிகம் என்ற அடிப்படையில் அந்தப் பக்கமே பாமகவினர் கணிசமாக சாய்வார்கள் என்று தெரிகிறது.
இதற்கிடையே தேமுதிகவும் தனது பங்குக்கு அதிக வாக்குகளைக் கவர ஆர்வமாக உள்ளது. இருப்பினும் பண பலத்தைக் காட்டாமல் அமைதியான முறையில் வன்னியர்களின் வாக்குகளை அள்ள அதுவும் முயற்சித்துக் கொண்டிருக்கிறதாம்.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications