வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு: சமூகநீதி பேரவை சார்பில் போராட்டம்-ராமதாஸ்
சேலம்: தமிழகத்தில் சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கு எடுக்க கோரி வக்கீல்கள் சமூகநீதி பேரவை சார்பில் டிசம்பர் 22 -ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
வக்கீல்கள் சமூகநீதி பேரவையின் சேலம் மற்றும் ஈரோடு மாவட்ட கருத்தரங்க மாநாடு சேலத்தில் நடைபெற்றது.
இதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசுகையில்,
தகுதியான வக்கீல்கள் நமது (வன்னியர்) சமுதாயத்தில் இருக்கிறார்கள். தகுதியான நமது சமுதாய மக்களை கைதூக்கிவிட்டு இடஒதுக்கீடு அடிப்படையில் பதவியில் அமர்த்த நம்மிடம் அரசியல் அதிகாரம் இல்லை. எனவே போராடவேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.
சென்னை ஐகோர்ட்டில் உள்ள 126 மூத்த வக்கீல்களில் ஒருவர் கூட வன்னியர் கிடையாது. ஆனால் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மட்டும் 36 பேர் மூத்த வக்கீல்களாக உள்ளனர்.
இது போல படிப்பு, வேலை, தொழில் போன்றவற்றிலும் வன்னியர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. எனவே, சாதிவாரியாக கணக்கெடுத்தால் மட்டுமே இட ஒதுக்கீட்டு சலுகை நாம் பெற முடியும்.
எனவே, டிசம்பர் 22 ம் தேதி சாதிவாரியாக கணக்கு எடுப்பை வலியுறுத்தி, வக்கீல் சமூகநீதி பேரவை சார்பில் கறுப்பு கோர்ட்டு அணிந்து தமிழகத்தில் போராட்டம் நடத்தப்படும்.
அருந்ததியர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் தனி இடஒதுக்கீடு வழங்கிய அரசு, பெரும்பான்மை சமுதாயமாக விளங்கும் வன்னியர்களுக்கும் 20 சதவீத தனி இட ஒதுக்கீடு ஏன் வழங்ககூடாது?
வருகிற 2010 -ம் ஆண்டில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனிஒதுக்கீடு கேட்டு நடத்தும் மிகப்பெரிய போராட்டத்தை தமிழ்நாடு சந்திக்க போகிறது.
5 ஆயிரம் வக்கீல்கள் கறுப்பு கோர்ட்டுடன் பங்கேற்கும் ஊர்வலம் மற்றும் மாநாடு சென்னையில் நடத்தப்படும். எந்த தேதியில் போராட்டம் என்பதை பின்னர் தெரிவிக்கப்படும் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications