ஒபாமா விருந்தில் பங்கேற்றது எப்படி-சொல்வதற்கு பணம் கேட்கும் அழையா விருந்தாளி ஜோடி!

பிரதமர் மன்மோகன்சிங் கடந்த வாரம் அமெரிக்கா சென்றிருந்தபோது அவருக்கு அதிபர் ஒபாமா சிறப்பு விருந்து கொடுத்தார். உலகின் கவனத்தை ஈர்த்த இந்த விருந்து நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரபலங்கள் சுமார் 400 பேர் கலந்து கொண்டனர்.
பலத்த பாதுகாப்புடன் நடந்த இந்த விருந்து நிகழ்ச்சியில் அமெரிக்காவின் வெர்ஜினீயா மாகாணத்தைச் சேர்ந்த தாரிக் சலாஹி என்பவரும் அவரது மனைவி மிஷலும் அழையா விருந்தாளிகளாக, பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி உள்ளே சென்றனர்.
ஒபாமாவுடன் மிஷல் கை குலுக்கி பேசினார். விருந்திலும் அவர்கள் பங்கேற்றனர்.
நீண்ட நேரத்துக்கு பிறகே அவர்கள் இருவரும் ஒபாமா விருந்தில் கலந்து கொள்ள முன் அனுமதி பெறவில்லை என்று தெரிய வந்தது. உரிய அனுமதி சீட்டு இல்லாமல் அவர்கள் எப்படி விருந்து அரங்குக்குள் நுழைந்தனர் என்பது மர்மமாக இருந்தது.
அமெரிக்க போலீசாருக்கும், உளவுத்துறைக்கும் இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை கொடுத்தது. தாரிக்கையும் மிஷலையும் சோதிக்காமல் உள்ளே அனுப்பிய காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் தாங்கள் எப்படி உள்ளே போனோம் என்பதைச் சொல்லப் போவதாக சிஎன்என் டிவிக்கு அவர்கள் அறிவித்திருந்தனர். இதையடுத்து அவர்களின் பேட்டியைக் காண ஆர்வம் ஏற்பட்டது அமெரிக்காவில்.
இந்த நிலையில் திடீரென அதை ரத்து செய்து விட்டனர் தாரிக் தம்பதியினர். காரணம், தங்களுக்கு அதிக பணம் கொடுப்பவர்களுக்கே பேட்டி என்று கூறி விட்டனர். அதுவும் கோடிக்கணக்கில் பணம் கேட்கிறார்களாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications