போலீசுடன் சென்ற கைதிக்கு அரிவாள் வெட்டு
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: சிவகங்கை அருகே போலீஸ் பாதுகாப்பு வளையத்தில் இருந்த விசாரணை கைதிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
சிவகங்கையை சேர்ந்தவர் வேல்முருகன் (35). இவர் மீது கொலை முயற்சி வழக்கு உள்ளது. இவரை விசாரணைக்காக சிவகங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்துச் சென்றனர்.
சிறையில் இருந்து பேருந்தில் செல்ல பேருந்து நிலையத்திற்கு 2 போலீசார் வேல்முருகனை அழைத்துச் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது கரிமேடு காவல் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த 20 பேர் அடங்கிய ஒரு கும்பல் போலீசார் கண்களில் மிளகாய் பொடிகளை தூவி விட்டு வேல்முருகனை ஓட ஓட விரட்டி வெட்டியது. இதில் வேல்முருகன் படுகாயமடைந்தார்.
இதனையடுத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு பொது மருத்துவமனையில் வேல் முருகன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.












Click it and Unblock the Notifications