சட்ட வாரிய மாஜி தலைவர் வீட்டில் சிபிஐ ரெய்ட்-ரூ.85 லட்சம் சிக்கியது
டெல்லி: கம்பெனி சட்ட வாரிய முன்னாள் தற்காலிக தலைவர் வாசுதேவன் வீட்டிலிருந்து ரூ. 85 லட்சம் பணத்தை சிபிஐ அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
இந்த சென்னை வீடு தவிர டெல்லியில் உள்ள வீட்டையும் சேர்த்து இதுவரை இரு வீடுகளிலிருந்தும் ரூ. 1.4 கோடி பணத்தை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். டெல்லி வீட்டில் ரூ. 55 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
நவம்பர் 23ம் தேதி வாசுதேவன், மனோஜ் பந்தியா என்ற கம்பெனி செயலாளரிடமிருந்து ரூ. 7 லட்சம் லஞ்சத்தை தனது டெல்லி வீட்டில் வைத்து பெற்றபோது கையும் களவுமாக சிபிஐ அதிகாரிகளிடம் சிக்கினார். பந்தியாவும் கைது செய்யப்பட்டார்.
இவர்கள் தவிர உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஆங்குர் சாவ்லா என்பவர் மீதும் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்திய குற்றவியல் சட்டம், ஊழல் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், டெல்லி, கொல்கத்தா, சென்னை உள்பட 7 இடங்களில் இவர்களுக்குச் சொந்தமான இடங்களில் ரெய்டும் நடத்தப்பட்டது.
கம்பெனி சட்ட வாரிய முன்னாள் தற்காலிக தலைவரான வாசுதேவன் தற்போது வாரிய உறுப்பினராக உள்ளார். இவரது வீடுகள், வங்கிக் கணக்குகளில் நடந்த சோதனைகளில் பெருமளவில் பணம் சிக்கியது. மூன்று வங்கி லாக்கர்களிலிருந்து மட்டும் ரூ. 85.33 லட்சம் பணம் எடுக்கப்பட்டது. நான்காவது லாக்கர் இன்னும் திறக்கப்படவில்லை.
இதுதவிர ரூ. 6 முதல் ரூ. 7 லட்சம் மதிப்பிலான 10-12 கிலோ வெள்ளி நகைகள், 450 கிராம் தங்க நகைகளும் சிக்கியுள்ளன.
இதுதவிர ரூ. 6.9 லட்சம் நிரந்தர வைப்பு திட்ட ஆவணங்கள், 12 வங்கிக் கணக்கு பாஸ்புக்குகளும் சிக்கியுள்ளன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications