சுகோய் போர் விமானம் விழுந்து நொறுங்கியது - பைலட்டுகள் தப்பினர்

இந்திய விமானப்படையில் சுகோய் விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளாவது இது 2வது முறையாகும். கடந்த ஏப்ரல் 30ம் தேதி ஒரு சுகோய் விழுந்து நொறுங்கியது. அதில் பயணம் செய்த துணை பைலட் உயிரிழந்தார். பைலட் தப்பினார்.
இந்த நிலையில் நேற்று ராஜஸ்தான் மாநிலம் பொக்ரான் அருகே உள்ள ஜெதா கி தானி என்ற இடத்தில் ஒரு சுகோய் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் இரு பைலட்டுகளும் பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பினர்.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய விமானப்படை செய்தித் தொடர்பாளரான விங் கமாண்டர் டி.கே.சிங்கா கூறுகையில், ஜெய்சால்மர் மாவட்டம், பொக்ரானுக்கு தென் மேற்கே ஒரு சுகோய் போர் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் இரு பைலட்டுகளும் தப்பினர் என்றார்.
நேற்று மாலை 4.45 மணிக்கு இந்த சுகோய் விமானம் ஜோத்பூரிலிருந்து கிளம்பியது. வழக்கமான பயிற்சிக்காக இது சென்றது. மாலை 5.30 மணியளவில் விபத்துக்குள்ளானது.
விமானத்தை விங் கமாண்டர் ஸ்ரீவத்சவ் என்பவர் இயக்கிக் கொண்டிருந்தார். அவருடன் ஒரு நேவிகேட்டரும் இருந்தார்.
விமானம் கீழே விழுவதற்கு முன்பு இருவரும் பாராசூட் மூலம் உயிர் தப்பினர்.
இந்திய விமானப்படை இந்திய ஆண்டு சந்திக்கும் 13வது விமான விபத்து இது. இந்த 13 விமானங்களில் 8 விமானங்கள் போர் விமானங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications