மதுராந்தரகம் அருகே வி.சி. பிரமுகர் கொலை
மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவியின் மகனை ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்தது.
மதுராந்தகம் அருகே உள்ள சூனாம்பேட்டை சேர்ந்த கஜேந்திரனின் மனைவி தமிழரசி. விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த தமிழரசி சூனாம்பேடு ஊராட்சி மன்றத் தலைவியாக உள்ளார்.
இவரது மகன்கள் ஆனந்தன் (34), அருள் (30). இருவரும் பல்வேறு கொலை, கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடையவர்கள்.
இவர்களது உறவினரான செந்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளராக இருந்தார். சமீபத்தில் அவர் நீக்கப்பட்டு அந்தப் பதவியில் ஆனந்தன் நியமிக்கப்பட்டார்.
இதனால் செந்தில், ஆனந்தன் குடும்பத்தினர் இடையே பகை மூண்டது. இந் நிலையில் ஆனந்தன், அருள் மற்றும் கூட்டாளிகள் சேர்ந்து செந்திலை கொலை செய்தார்.
இதனால் செந்திலின் ஆதரவாளர்கள் சில மாதங்களுக்கு முன் ஆனந்தனையும் அவரது தந்தை கஜேந்திரனையும் வெட்டினர். இதில் கஜேந்திரன் இறந்தார். ஆனந்தன் தப்பிவிட்டார்.
இதையடுத்து ஆனந்தனை போலீசார் சிறையில் அடைத்தனர்.
ஆனந்தனின் தம்பி அருள் அந்த பகுதியை சேர்ந்த மைதிலி என்ற பெண்ணை காதலித்து வந்தார். நேற்றிரவு மைதிலின் வீட்டில் அருள் இருந்தபோது செந்திலின் ஆதரவாளர்கள் வீட்டுக்குள் புகுந்து அருளை சரமாரியாக வெட்டினர்.
மயங்கி விழுந்த அருளின் தலையில் பாறாங்கல்லையும் போட்டனர். இதில் தலை சிதறி அதே இடத்தில் அருள் பிணமானார்.
சம்பவத்தில் மைதிலிக்கும் வெட்டு விழுந்தது. அவர் தப்பியோடியதால் பிழைத்துக் கொண்டார்.
கொலைக் கும்பலைப் பிடித்த தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications