திமுக சட்ட மன்ற உறுப்பினர் பெரியண்ணன் உடல் அடக்கம்
தர்மபுரி: பென்னாகரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ மற்றும் தருமபுரி வடக்கு மாவட்ட திமுக செயலாளரான பெரியண்ணன் உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது.
பென்னாகரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ - வாக இருந்தவர் பெரியண்ணன் (54). இவர் தருமபுரி வடக்கு மாவட்ட திமுக செயலாளராகவும் பணியாற்றி வந்தார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார் பெரியண்ணன். சிகிச்சை எடுத்து வந்த நிலையில் உடல் நலம் மோசமடைந்தது. இதனையடுத்து சென்னையில் ஒரு பிரபல தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பெரியண்ணன் இறந்தார்.
அவருக்கு முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின், கனிமொழி மற்றும் அமைச்சர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அவரது உடல் சொந்த ஊரான தருமபுரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் இறுதிச் சடங்குகள் தொடங்கின. இறுதி ஊர்வலத்தில், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம் உட்பட திமுக கட்சியின் முக்கிய பிரமுகர்கள், பாமக தலைவர் ஜி.கே.மணி மற்றும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பின்பு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இறந்து போன பெரியண்ணனுக்கு ஒரு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications