விலைவாசி உயர்வு குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி- கோபப்பட்ட பிரணாப்
டெல்லி: விலைவாசி உயர்வு குறித்து கேட்ட கேள்விகளுக்கு முறையாகப் பதிலளிக்காமல் கோபப்பப்பட்டு பேசியதால் பிரணாப் முகர்ஜியை கண்டித்து எதிர்க்கட்சிகள் ராஜ்யசபாவில் அமளியில் ஈடுபட்டன.
நேற்று ராஜ்யசபாவில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்து கேட்கப்பட்டது. காங்கிரஸ் உறுப்பினர் ராஜீவ் சுக்லா எழுந்து, சமையல் எண்ணை உள்ளிட்டவற்றின் விலை உயர்வைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கேட்டார்.
இதற்குப் பதிலளித்த பிரணாப், உற்பத்திக்கும், பொருட்களின் தேவைக்கும் இடையே சம நிலை இல்லாததே இதற்கு முக்கிய காரணம்.
குறிப்பாக பருப்பு வகைகள், சமையல் எண்ணை, சர்க்கரை போன்றவை தேவையான அளவுக்கு உற்பத்தி இல்லை, வரத்து இல்லை. இதனால் கிராக்கி அதிகமாகி விலை உயர்வுக்கு வித்திட்டுள்ளது என்றார்.
அப்போது குறுக்கிட்ட சிபிஎம் உறுப்பினர் பிருந்தா காரத், சர்க்கரை விலை கிலோ ரூ. 40க்கு விற்கிறது. இதைக் கட்டுப்படுத்த அரசு என்ன செய்துள்ளது என்றார்.
அதற்கு அவர் பதிலளித்தபோது மற்ற இடதுசாரி உறுப்பினர்களும் எழுந்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருப்பதாக குற்றம் சாட்டினர்.
இதனால் கோபமடைந்தார் பிரணாப். ஆவேசமாக பேசிய அவர், உங்க கோபத்தை இங்கே காட்டாதீங்க. வேறு எங்கேயாவது போய் காட்டுங்க என்றார் வேகமாக.
பின்னர் பதிலளிக்காமல் உட்கார்ந்து விட்டார். இதனால் ஆவேசமடைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மொத்தமாக எழுந்து பிரணாபை குற்றம் சாட்டிப் பேசியதால் அவையில் அமளி ஏற்பட்டது.
பின்னர் மீண்டும் எழுந்து பிரணாப், இந்த ஆண்டு சர்க்கரையின் கையிருப்பு 16 மில்லியன் டன்களாக இருக்கும். ஆனால் தேவை 23 மில்லியன் டன்களாக உள்ளது. எனவே பற்றாக்குறை காரணமாக விலைவாசி உயர்ந்துள்ளது.
இதனால் சாதாரண வகுப்பு மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க பொது விநியோகத் திட்டத்தின் மூலம் இவை முறையாக உரியவர்களுக்கு சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு மாநில அரசுகளும் உதவ வேண்டும் என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications