பாட திட்டத்தில் மத கருத்து இல்லை-அமைச்சர்
சென்னை: சமச்சீர் கல்விக்கான பொதுப் பாடத்திட்ட வரைவில் எந்த ஒரு மதத்திற்கு எதிரான கருத்துக்களும் இடம் பெறவில்லை என்று பள்ளிக் கல்வித்துறை
அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்துள்ளார்.
சமச்சீர் கல்வித் திட்டத்தில் நாத்திக கருத்துக்களை புகுத்துவதாக இந்து முன்னணி புகார் கூறியிருந்தது.
இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் தமிழக பள்ளிக் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிக்கை:
சமச்சீர் கல்விக்கான பொதுப்பாடத் திட்ட வரைவு மாணவர்களின் சிந்தனை திறனை வளர்த்து, எதிர்கால சிக்கல்களை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளும்
விதமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அம்சங்களையே
உள்ளடக்கியுள்ளது.
கல்லூரி பேராசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துக்களையும் பெற்று பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையாக உள்ள மதச்சார்பற்ற தன்மையினைக் கருத்தில் கொண்டு பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
திருவாசகம், தேவாரம், நாலாயிர திவ்விய பிரபந்தம், பெரியபுராணம் மற்றும் கம்பராமாயணமும் இறுதி
செய்யப்பட்ட பாடத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
இஸ்லாமியர் வருகை, அவர்களின் ஆட்சி முறை மற்றும் அவைகளின் தாக்கம் ஆகியவை இந்திய வரலாற்றின் ஒரு கூறாகும். இந்த அடிப்படையிலேயே அவற்றைப் பற்றிய பாடங்கள் வரைவுப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
பெரியாரின் பகுத்தறிவு மற்றும் சமுதாய சீர்திருத்த சிந்தனைகளை மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்ற அடிப்படையில் பெரியாரின் கருத்துக்கள் மற்றும் அவரது வாழ்க்கை வரலாறு பொதுப் பாடத்திட்ட வரைவில் சேர்க்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் தற்பொழுது நடைமுறையில் உள்ள பாடத்திட்டத்திலும் பெரியார் பற்றிய பாடம் இடம் பெற்றுள்ளது. பொதுப் பாடத்திட்ட வரைவில் இந்து மதத்திற்கு
எதிராகவோ அல்லது எந்த ஒரு மதத்திற்கும் எதிரான கருத்துகளோ இடம் பெறவில்லை என்று கூறியுள்ளார்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications