நீலகிரி சேதம்- மத்திய அரசிடம் நிதியுதவி கோரும் ராசா
டெல்லி: மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் சாலை சீரமைப்பு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி மத்திய அரசுக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராசா கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக மத்திய அரசின் நெடுஞ்சாலைத் துறை அமைச்சருக்கு ராசா எழுதியுள்ள கடிதத்தில்,
அண்மையில் பெய்த வடகிழக்குப் பருவ மழையின் காரணமாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் அனைத்தும் பெருமளவில் சேதடைந்துள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் 150 இடங்களில் நிலச்சரிவும், 40 இடங்களில் மண் அரிப்பும் ஏற்பட்டு சாலையின் சுற்றுச்சுவர்கள் சேதமடைந்துள்ளன.
பர்லியார் மரப் பாலம் உள்ளிட்டவை வெள்ளத்தில் முழுவதுமாக அடித்து செல்லப்பட்டு, ஆழமான பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் சீரமைப்பு பணிகள் முழு முனைப்புடன் நடைபெற்று வருகிறது.
அதேபோல் கோவை மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை 47 மற்றும் 67 பெருமளவில் சேதமடைந்துள்ளது. சாலைகளில் அதிகளவு பள்ளங்கள், ஏற்பட்டு, பாதிக்கப்பட்டுள்ளது.
செங்கபள்ளி எல் அண்டு டி பைபாஸ் சாலை, மதுரைக்கரை வாளையார் சாலை, மேட்டுப்பாளை யம் ஊட்டி சாலை, கூடலூர் சாலை ஆகியவற்றில் நிரந்தர சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
மேலும் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தேசிய நெடுஞ்சாலைகளையும் போர்க்கால அடிப்படையில் சரி செய்ய தேவையான நிதியை ஒதுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ராசா.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications