ராமர் கோவில்-இ.முன்னணி காவி கொடி போராட்டம்
சென்னை: அயோத்தியில் ராமர் கோவில் கட்ட மத்திய அரசு உடனடியாக அனுமதி வழங்கிடக் கோரி தமிழகம் முழுவதும் காவிக் கொடிகளுடன் ஆர்ப்பாட்டம், ரயில் மறியல் போராட்டம் ஆகியவை நடத்தப்படும் என இந்து முன்னணி அறிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் மாநில அமைப்பாளர் முருகானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பிரச்சனை 60 வருடங்களாக தீராமல் உள்ளது. டிசம்பர் 6 ம் தேதியையொட்டி தமிழகத்தில் முஸ்லீம் அமைப்புகள் மத டென்ஷனை உருவாக்குகிறது.
பொது மக்கள் பயணம் செய்ய முடியாத நிலையை உருவாக்குகின்றனர். காவல் துறையினர் 15 நாட்களுக்கு நிம்மதியில்லாமல் செய்து விடுகிறது. அயோத்தி நகரம் உள்ள உத்திர பிரதேச மாநிலத்தில் முஸ்லீம்கள் அமைதியை நிலை நாட்டும் போது தமிழக முஸ்லீம் அமைப்புகள் மட்டும் நிம்மதியில்லாமல் செய்கிறார்கள்.
இதற்கெல்லாம் காரணம் அரசியல்வாதிகள் இந்தப் பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்டாமல் இருப்பது தான் காரணம்.
ராமஜென்ம பூமி இடம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கு 1948ல் இருந்து நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு உடனே முடிக்கப்பட்டிருந்தால் நேரு காலத்திலேயே இந்தப் பிரச்சனை முடிந்திருக்கும்.
ராமஜென்ம பூமி இடம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கின் முடிவை, மத்திய அரசு உடனே வெளியிட வேண்டும். 100 கோடி இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்க வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தி இந்து முன்னணி இயக்கத்தின் சார்பாக தமிழகம் முழுவதும் காவிக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
சென்னை, ராமேஸ்வரம், திருச்செந்தூர், திருநெல்வேலி, திண்டுக்கல், கரூர் ஆகிய இடங்களில் ரயில் மறியல் போராட்டமும் மற்ற இடங்களில் ஆர்ப்பாட்டமும் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
இந்து முன்ணனியின் நிறுவனர் ராமகோபாலன் வெளியிட்டுள்ள இன்னொரு அறிக்கையில்,
டிசம்பர் 6ம் தேதி அன்று 6 முஸ்லீம் அமைப்புகளுக்கு அனுமதி அளித்துள்ளதாக காவல் துறை அதிகாரி பத்திரிக்கையாளர்கள் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 6ம் தேதி அன்று ஸ்ரீ ராமர் ஆலயம் அயோத்தியில் அமைத்திட வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்திட அனுமதி கோரி காவல் துறை அதிகாரியிடம் மனு கொடுக்கப் பட்டுள்ளது. இதுவரை எந்தவித பதிலும் தரப்படவில்லை.
காவல் துறையினர் இத்தகைய பாரபட்சமான போக்கை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.
பாரபட்சம் இல்லாமல், ஜனநாயக ரீதியில் செயல்பட காவல் துறை அதிகாரிகளை இந்து முன்னணி கேட்டுக் கொள்கிறது என்று கோரியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications