பாக் மசூதியில் குண்டுவெடிப்பு-36 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ராவல்பிண்டி: பாகிஸ்தானில் மசூதியில் தற்கொலைப் படையினர் நடத்திய தாக்குதலில் 36 பேர் பலியானார்கள்.
பாகிஸ்தான் ராவல்பிண்டியில் சோஹர் சவுக் அருகே உள்ள மசூதியில் நடமாட்டம் அதிகம் உள்ள சமயத்தில் தற்கொலைப் படையினர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதில் 36 பேர் பலியாகியுள்ளனர். 68க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலை தாலிபான் தீவிரவாதிகளின் தற்கொலைப் படை நடத்தியிருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
பாகிஸ்தானில் கடந்த 2 மாதத்தில் தீவிரவாத தாக்குதல்களுக்கு இதுவரை 250 பேர் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications