ஒகேனக்கல் குடிநீர் திட்ட செலவு ரூ.1,928 கோடியாக உயர்வு
சென்னை: ரூ. 1,334 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் ஒகேனக்கல் குடிநீர் திட்டத்திற்கான நிதி மதிப்பீடு தற்போதையே விலை மதிப்பீட்டின்படி ரூ.1,928.80 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒகேனக்கல் குடிநீர் திட்ட செயலாக்கம் குறித்து துணை முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு நடத்தினார்.
தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 3 நகராட்சிகள், 17 பேரூராட்சிகள் மற்றும் 18 ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள 6755 ஊரகக் குடியிருப்புகளிலுள்ள 29.8 லட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்க ஒகேனக்கல் குடிநீர் மற்றும் புளோரைடு பாதிப்பு குறைப்பு திட்டம் ஜப்பானின் நிதி உதவியுடன் ரூ. 1,334 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தருமபுரியிலிருந்து, 45 கி.மீ. தூரத்தில் ஓடும் காவிரியாற்றை நீராதாரமாகக் கொண்டு இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந நிலையில் தற்போதைய விலை மதிப்பீட்டின்படியும், இறுதி வடிவமைப்பின்படியும் ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தின் திருத்திய மதிப்பீடு ரூ.1,928.80 கோடியாகும் என அரசு அறிவித்துள்ளது.
இத்திட்டத்தின் செயலாக்கப் பணிகளை ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.
திட்டமிட்டபடி பணிகள் 2010ம் ஆண்டு மார்ச் மாதம் துவங்கப்படவுள்ளன. அதே போல 2012ம் ஆண்டு டிசம்பருக்குள் இத் திட்டத்தை முடிக்குமாறு அதிகாரிகளுக்கு ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இலங்கைத் தமிழர்களுக்கு திமுக துணை நிற்கும்:
இந் நிலையில் சென்னை புழலில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள் முகாமில் இலவச டி.வி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. முகாமில் உள்ள 446 குடும்பங்களுக்கும் டி.விக்கள் வழங்கப்பட்டன.
மேலும் முகாமில் உள்ளவர்களுக்கு கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் புகைப்படங்கள் எடுக்கும் பணியையும் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவி திட்டத்தின் கீழ் ஒரு பெண்ணுக்கு ரூ.20,000மும், இளைஞர்களுக்கு ரூ. 25,000 மதிப்புள்ள விளையாட்டு உபகரணங்கள், மன வளர்ச்சி குன்றிய ஒரு குழந்தைக்கு மாதம் ரூ.500 வீதம் வாழ்நாள் முழுவதும் வழங்குவதற்கான உத்தரவு ஆகியவற்றையும் வழங்கி ஸ்டாலின் பேசுகையில்,
இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு வந்து நீண்ட காலமாக வாழும் தமிழர்களின் நலனை பாதுகாக்க முதல்வர் கருணாநிதி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அவர்களுடைய அடிப்படை பிரச்சனைகளையும், வாழ்வாதாரத்தையும் மையமாக வைத்து அண்மையில் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்தார்.
இலங்கைத் தமிழர்களுக்கு இலவச டி.விக்கள் வழங்க ரூ. 4.54 கோடி, கலைஞர் காப்பீடு திட்டத்தை செயல்டுத்த ரூ.1 கோடி, 1,200 பெண்களுக்கு திருமண உதவி தொகை வழங்க ரூ.2.4 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
354 பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க ரூ. 8 லட்சம், குடியிருப்புகளை பழுதுபார்க்கவும், அடிப்படை வசதிகளை செய்து தரவும் ரூ.43 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல் அரசின் சார்பில் வழங்கப்படும் பல சலுகைகள் அவர்களுக்கு கிடைத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முகாமில் இருப்பவர் சில கோரிக்கைகளை வைத்தார்கள். டிரைவிங் லைசென்ஸ் யார் யாருக்கு வேண்டுமோ அவர்களுக்கு விதி முறைகளை தளர்த்தி வழங்குவதற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
ரேஷன் கடை வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்கள். இதே போல் பல பகுதிகளில் இந்த பிரச்சனை உள்ளது. எந்தெந்த பகுதிகளில் ரேஷன்கடை தேவைபடுகிறதோ அந்த பகுதியில் அமைக்க முடிவெடுக்கபட்டுள்ளது.
இந்த பகுதியில் ரூ. 2.5 லட்சத்தில் புதிய ரேஷன் கடை கட்டப்படும்.
என்றைக்கும் தமிழர்களாக இருக்கும் உங்களுக்கு கலைஞர் அரசு துணை நிற்கும் என்றார் ஸ்டாலின்.
-
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்!












Click it and Unblock the Notifications