இலங்கை அகதிகள் முகாமில் இலவச டிவி விநியோகம்
நெல்லை: இலங்கை அகதிகள் முகாமில் தமிழக அரசின் இலவச டிவிக்களை மாநில அமைச்சர்கள் மைதீன்கான், பூங்கோதை வழங்கினர்.
தமிழகத்தில் இலங்கை அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ரூ.100 கோடி அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும தமிழக மக்களுக்கு அமல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத் திட்டங்கள் அகதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் எனவும் அரசு அறிவித்தது.
அதன்படி, நெல்லை பகுதிகளில் உள்ள அகதிகள் முகாம்களில் இலவச கலர் டிவி வழங்கப்பட்டது.
பெருமாள்புரத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயராமன் தலைமையில் 48 குடும்பங்களுக்கு இலவச கலர் டிவியை அமைச்சர் மைதீன்கான், பூங்கோதை வழங்கினர்.
அப்போது அமைச்சர் மைதீன்கான் கூறுகையில், 'நெல்லை மாவட்டத்தில் 10 அகதிகள் முகாம்களில் 888 இலங்கை தமிழர் குடும்பங்கள் உள்ளன. தற்போது இவர்கள் பயன்பெரும் வகையில் அரசு சார்பில் இலவச கலர் டிவிக்கள் வழங்கப்பட்டுள்ளன. மற்ற அனைத்து வசதிகளும் விரைவில் செய்து கொடுக்கப்படும்' என்றார்.
கங்கைகொண்டான் இலங்கை அகதிகள் முகாமில் கலெக்டர் தலைமையில் அமைச்சர் பூங்கோதை இலவச கலர் டிவிக்களை வழங்கினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications