முஸ்லீம் லீக்கை யாராலும் அழிக்க முடியாது - அப்துல் ரஹ்மான் எம்.பி.
புளியங்குடி: தமிழகத்தில் எந்த ஒரு சக்தியாலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை அழித்துவிட முடியாது என வேலூர் எம்பி அப்துல் ரகுமான் தெரிவித்தார்.
புளியங்குடி அரபி பாடசாலையில் நகர முஸ்லிம் லீக் அனைத்து அணி சார்பில் பொது கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் வேலூர் தொகுதி எம்பி அப்துல் ரகுமான் பேசுகையில்,
தமிழகத்தில் நடந்து முடிந்த பார்லிமெண்ட் தேர்தலில் பல விமர்சனங்களை தகர்த்து வெறறி பெற்றுள்ளோம். முஸ்லிம் லீக் எடுத்த முடிவு சமுதாயத்திற்கு பயன் உள்ளதாக அமைந்ததா என்ற நிலையில்தான் நான் இங்கு பல உண்மைகளை கூறுகிறேன்.
தமிழகத்தில் 12 முதல் 15 சதவீதம் முஸ்லிம் சமுதாயத்தினர் உள்ளனர். ஒரு தொகுதியிலும் அதிக அளவு இல்லாமல் வாக்குகள் சிதறி கிடப்பதால் பல அமைப்புகள் உருவெடுத்து வாக்குகளை சிதறடித்து வெற்றி வாய்ப்பை பறித்து விடும்.
பாபர் மசூதி இடிப்பு என்பது இந்தியாவின் இறையாண்மை, இந்தியாவின் மதிப்பை கீழிறக்கியற்கு சமமாகும். எனவே சமூக நல்லிக்கணத்தோடு சகோதரத்துவத்துடன் பிற மக்களையும் நாம் அனுசரித்து நமது கருத்தை முறையாக பதிவு செய்வோம் என்றால் இதற்கு நல்ல முடிவு கிடைக்கும்.
இச்சூழ்நிலையில் முஸ்லிம் லீக்கை தவறாக விமர்சனம் செய்தோ, பழித்தோ மத்தியில் யாராலும், எந்த சக்தியாலும் அழி்த்து விட முடியாது. அப்படி நினைத்தவர்கள் முன்பு தற்போது முஸ்லிம் லீக் அபார வளர்ச்சி அடைந்து வருகிறது என்றார் அவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications