79 வயது பாட்டியை மானபங்கம் செய்த வாலிபர்!
Subscribe to Oneindia Tamil
அய்ஸ்வால் (மிஸோரம்): மிஸோரம் மாநிலத்தில், 79 வயதான மூதாட்டியை மானபங்கம் செய்த 23 வயது இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மிஸோரம்- மியான்மர் எல்லையில் உள்ள நகரம் சம்பாய். இந்த ஊரைச் சேர்ந்தவர் அந்த 79 வயது மூதாட்டி. இவருக்கு காது கேட்காது.
நேற்று இவரது பேத்தி வெளியே போயிருந்தார். வீட்டில் பாட்டி மட்டும் தனியாக இருந்தார். அப்போது அந்த 23 வயது இளைஞர் வீட்டுக்குள் புகுந்து பாட்டியை பலாத்காரம் செய்துள்ளார்.
வெளியே போய் விட்டுத் திரும்பி வந்த அவரது பேத்தி பாட்டி மயங்கிய நிலையில் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பாட்டி நடந்ததைக் கூறவே போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது.
போலீஸார் விரைந்து வந்து அந்த நபரைப் பிடித்து விசாரித்தனர். அப்போது தான் செய்த அக்கிரமத்தை அந்த நபர் ஒத்துக் கொள்ளவே கைது செய்து அழைத்துச் சென்றனர்.












Click it and Unblock the Notifications