மனைவிக்கு எச்ஐவி கலந்த ரத்த ஊசி போட்ட கணவன்
வெலிங்டன் : எச்ஐவி வைரஸ் அடங்கிய ரத்தத்தை, ஊசி மூலம் தூங்கிக் கொண்டிருந்த தனது மனைவிக்கு செலுத்தியுள்ளார் நியூசிலாந்து கணவர் ஒருவர்.
நியூசிலாந்தில் இப்படி ஒரு சம்பவம் நடப்பது இதுவே முதல் முறையாகும். அந்த நாட்டுச் சட்டப்படி அந்த கணவருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும் என்கிறார்கள்.
அவரது பெயர் விவரம் வெளியிடப்படவில்லை. அந்த நபருக்கு வயது 35. கடந்த 2004ம் ஆண்டு நடத்தப்பட்ட ரத்தப் பரிசோதனையில் அவருக்கு எய்ட்ஸ் இருப்பது தெரிய வந்தது.
ஆனால் அவரது மனைவிக்கும், இரு குழந்தைகளுக்கும் இந்தப் பாதிப்பு தொற்றவில்லை. இருப்பினும் தனது இரு குழந்தைகளின் நலனுக்காக கணவருடன் தொடர்ந்து வாழ அந்தப் பெண் முடிவு செய்தார். ஆனால் கணவருடன் உடலுறவுக்கு மட்டும் தீர்மானமாக மறுத்து விட்டார்.
இது அவரது கணவருக்கு வேதனையை ஏற்படுத்தியது. மனைவி தன்னுடன் பழையபடி இருக்க வேண்டும் என்று நினைத்த அவர், தூங்கிக் கொண்டிருந்தபோது அவரது உடலில் தையல் ஊசியால் தனது ரத்தத்தை எடுத்து மனைவியை இரண்டு முறை குத்தி செலுத்தி விட்டார்.
தூங்கிக் கொண்டிருந்ததால், இது அவரது மனைவிக்குத் தெரியவில்லை. நான்கு மாதங்களுக்குப் பின்னர் ஒரு பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்றபோது அவருக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பதாக தெரிவித்தனர் டாக்டர்கள்.
அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண், கணவரிடம் சண்டை போட்டுள்ளார். இதையடுத்து நான்தான் ரத்தத்தை செலுத்தினேன் என்று ஒப்புக் கொண்டார் கணவர். இதையடுத்து போலீஸில் புகார் கொடுக்கவே தற்போது போலீஸார் மனைவிக்கு எச்ஐவி ரத்தத்தை செலுத்திய கணவரை கைது செய்துள்ளனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications