தர்மபுரி: புலித்தோல் கடத்தியவர்கள் கைது
தர்மபுரி: புலித்தோல், யானை தந்தம் ஆகியவற்றை கடத்தியவர்களை தர்மபுரி அருகே மாறு வேடத்தில் சென்ற வனத்துறையினர் மடக்கிப் பிடித்தனர்.
தர்மபுரியை அடுத்த பாப்பாரப்பட்டி சவுலுப்பட்டி பிரிவு சாலையில் சிறுத்தை புலி தோலை மர்ம நபர்கள் கடத்தி வருவதாக, வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, மாவட்ட வன பாதுகாவலர் வரதராஜுலு உத்தரவின் பேரில், மாவட்ட வன அதிகாரிகள் மாறுவேடத்தில் சவுலுப்பட்டி பிரிவு சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, பைக்கில் வந்த மூன்று பேரை பிடித்து விசாரித்த போது, அவர்களிடம் சிறுத்தைப் புலித் தோல் இருப்பது தெரிய வந்தது. உடனே, வனத்துறையினர் அவர்களிடம் இருந்து சிறுத்தை புலி தோலை பறிமுதல் செய்து மூவரையும் பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில், அவர்கள் , பாப்பாரப்பட்டியைச் சேர்ந்த ஜெயவேல்(35), முருகன்(40), பெரியனூரைச் சேர்ந்த ராஜு(37) என தெரிய வந்தது. மூவரையும் வனத்துறையினர், தர்மபுரி நீதிமன்றம் மூலம் போலீசில் ஒப்படைத்தனர்.
இதேபோல், பாலக்கோடு எம்.ஜி.சாலை வழியாக ஒரு கும்பல், யானை தந்தத்தை கடத்தி வருவதாக தகவல் கிடைத்ததை அடுத்து, அந்த கும்பலை மாறுவேடத்தில் சென்று பிடித்தனர். அவர்களிடம் இருந்த யானை தந்தத்தை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், அவர்கள், பாப்பாரப்பட்டியைச் சேர்ந்த பொன்முடி(45), சங்கர்(28), பாலக்கோடைச் சேர்ந்த மணி(31), சிரியப்பட்டியைச் சேர்ந்த மாதேஷ்(32) ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்களும் கைது செய்யப்பட்டனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications