அமைச்சர்களுக்கு நரேஷ் குப்தா எச்சரிக்கை
திருச்செந்தூர்: தேர்தல் பிரசாரத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரியில் அனிதா பிரசாரம் செய்தபோது அப் பகுதியில் அதிமுக தேர்தல் அலுவலகம் அருகே நின்றிருந்த அதிமுகவினருக்கும், திமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் அதிமுக இளைஞர் பேரவைச் செயலாளர்
தாமோதரன், அதிமுக வார்டு செயலர் கே.கே.அரசகுரு, சுரேஷ்குமார், முருகேசன், சிவப்பிரகாசம் ஆகிய 5 பேரும் தாக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் தாமோதரன் புகார் அளித்தார். அதன்பேரில், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் திமுக நகரச் செயலாளர் கா.மு.சுரேஷ் அளித்த புகாரின்பேரில் அதிமுகவினர் 12 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர்களுக்கு குப்தா எச்சரிக்கை:
இந் நிலையில் போலீஸ் டி.ஜி.பி, கூடுதல் டி.ஜி.பி, இடைத் தேர்தல் நடக்கும் வந்தவாசி, திருச்செந்தூர் தொகுதிகளை உள்ளடக்கிய திருவண்ணாமலை மற்றும் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் எஸ்பிக்களுக்கு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அதில்,இரு சட்டசபை தொகுதிகளில் பிரசாரம் செய்யும் சில அமைச்சர்கள், சுழலும் சிவப்பு விளக்கு பொருத்திய கார் மற்றும் போலீஸ் பாதுகாப்பு வாகனத்துடன் செல்வதாக தகவல்கள் வந்துள்ளன. இது, தேர்தல் நன்னடத்தை விதிகளுக்கு புறம்பானது.
தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, எந்த அமைச்சரும் தங்களது வாகனத்தில் சைரனுடன், எவ்வித சுழலும் விளக்கும் பொருத்தியிருக்கக் கூடாது.
எனவே, இந்த உத்தரவை கண்டிப்பாக பின்பற்றுமாறு,
திரு வண்ணாமலை மற்றும் தூத்துக்குடி மாவட்ட போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். இதை பின்பற்றத் தவறினால், இவ்விஷயம் பற்றி தேர்தல் கமிஷனிடம் தெரிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
வந்தவாசிக்கு சிறப்பு காவல் படை:
வந்தவாசியில் இடைத்தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக, சிறப்பு காவல் படை வந்திறங்கியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி பகுதியிலிருந்து, 5 உயர் அதிகாரிகளைக் கொண்ட 85 சிறப்பு காவல் படையினர், வந்தவாசியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அடுத்தடுத்து மேலும் பல சிறப்பு காவல் படையினரும் வரவுள்ளனர்.
இங்குள்ள 217 வாக்குச் சாவடிகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என மாவட்ட எஸ்.பி. மோ.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
மேலும் இடைத் தேர்தலுக்காக வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்தும் போலீஸார் வரவழைக்கப்படுவர்.
மத்திய காவல் படைகள் 6 கம்பெனி அனுப்பி
வைக்கப்படும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.
457 துப்பாக்கிகள் ஒப்படைப்பு:
தூத்துக்குடி மாவட்டத்தில் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்கள், வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் பாதுகாவலர்கள் திருச்செந்தூர் இடைத் தேர்தல் முடியும் வரை தங்கள் துப்பாக்கிகளை ஓப்படைக்கும் வேண்டும் என்று கலெக்டர் பிரகாஷ் உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் துப்பாக்கி உரிமம் பெற்ற 507 பேரில் 457 பேர் தங்களது துப்பாக்கிகளை தங்களது பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் ஒப்படைத்துள்ளனர்.
மீதமுள்ள உரிமங்களில் 40க்கும் மேல் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பெயரில் உள்ளது என்பதால் அதனை உரிய அனுமதியின் பேரில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளன.
திமுகவினர்தான் தேர்தல் விதிமுறையை மீறியுள்ளனர்.
தேர்தல் விதிமுறையை மீறி வந்தவாசி தொகுதியில் புதிய சாலை அமைக்கபடுகிறது. இது எல்லாம் தேர்தல் விதி மீறல்கள் இல்லையா? என்றார்.
-
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க!












Click it and Unblock the Notifications