மத்திய பல்கலை.களில் இட ஒதுக்கீடு - கருணாநிதி கோரிக்கை நிராகரிப்பு
டெல்லி: மத்திய அரசு அமைக்கவுள்ள 15 மத்திய பல்கலைக்கழகங்களிலும் மெரிட் அடிப்படையில்தான் மாணவ, மாணவியர் சேர்க்கப்படுவர். இங்கும் இட ஒதுக்கீடு தந்தால், உலகத் தரம் வாய்ந்த என்ற பதத்திற்கு அர்த்தம் இல்லாமல் போய் விடும் என்று மத்திய மனித வளத்துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதி விடுத்த கோரிக்கையை அவர் நிராகரித்துள்ளார்.
சமீபத்தில் தமிழகம் வந்த மத்திய அமைச்சர் கபில் சிபல், திருவாரூரில் அமையும் மத்திய பல்கலைக்கழகத்தைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் கருணாநிதி, மத்திய பல்கலைக்கழகத்தில் தமிழக ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
ஆனால் தற்போது இந்தக் கோரிக்கையை கபில் சிபல் நிராகரித்துள்ளார். கருணாநிதி வைத்த கோரிக்கை குறித்து நேற்று ராஜ்யசபாவில் திமுக எம்.பிக்கள் கபில் சிபலிடம் கேட்டனர்.
அதற்குப் பதிலளித்த கபில் சிபல், இட ஒதுக்கீடு என்ற முடிவுக்கு நாம் போனால் மெரிட் என்ற வார்த்தைக்கு அர்த்தம் இல்லாமல் போய் விடும். உலகத் தரம் என்ற பதத்திற்கு அர்த்தம் இல்லாமல் போய் விடும்.
உலகத் தரம் வாய்ந்த மையங்களாக, ஆய்வு மையங்களாக, அறிவுசார் மையங்களாக மத்திய பல்கலைக்கழகங்களை உருவாக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் கொள்கை. இதன் அடிப்படையில்தான் புதிய மத்திய பல்கலைக்கழகங்கள் குறித்த அறிவிப்பை அரசு வெளியிட்டது.
இந்த மையங்கள் அனைத்தும் ஆய்வை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்படவுள்ளன. ஆய்வுப் பணிகளுக்கு இங்கு முக்கியத்தும் அளிக்கப்படவுள்ளது. எனவே அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வு மூலம் மட்டுமே இங்கு மாணவ, மாணவியர் சேர்க்கப்படுவர்.
இந்த திட்டத்தை இட ஒதுக்கீடு மூலம் நீர்த்துப் போகச் செய்ய நாங்கள் விரும்பவில்லை என்றார் அவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications